கொரோனா சிகிச்சைக்காக தயாராகும் விளையாட்டு மைதானம்!

Share this News:

நியூயார்க் (31 மார்ச் 2020): நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், உலக பிரசித்தி பெற்றது.

தற்போது அங்கு கொரோனா வைரஸின் தாண்டவத்தால் மருத்துவ வசதிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை 150 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கி உள்ளன. இதனிடையே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை இந்த ஆண்டு ரத்து செய்ய ஆல் இங்கிலாந்து க்ளப் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமைப்பு குழுவினர் புதன்கிழமைக் கூடி முடிவை அறிவிக்க உள்ளனர். பிரபலம் வாய்ந்த விம்பிள்டன் போட்டி ரத்தாகும் பட்சத்தில் 2வது உலக போருக்கு பிறகு இதே முதன்முறையாகும்.


Share this News:

Leave a Reply