கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இருவர் உயிர் தப்பியுள்ளனர். பஞ்சாப் வங்கியின் தலைமை அதிகாரி ஜாஃபர் மசூத் உயிர் தப்பியவர்களில் ஒருவர் . மற்றொருவ முஹம்மது ஜுபைர்.
இந்த பயணிகள் 91 பேரும் விமானப் பணியாளர்கள் 7 பேரும் விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.