அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு!

Share this News:

வாஷிங்டன் (27 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் அதிக அளவில் பரவி வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை அங்கு 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,054-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் கூடுதலாக 13,899 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்ப்பட்டுள்ளதால், நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 69,219-ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவத்துறையில் மேலோங்கி நிற்கும் அமெரிக்கா கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. எனினும் இதுவரை உறுதியான மருந்து கண்டுபிடிக்கப் படாதது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்தபடியே உள்ளன.


Share this News:

Leave a Reply