மாஸ்டர் படம் எப்படி? – முதல் பார்வை!

Share this News:

கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போகி ஓடிடியில் வெளியாகலாம் என்கிற நிலையில் படக்குழுவினரின் பிடிவாதத்தால் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13 2021)ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இனி படத்தைப் பற்றி பார்ப்போம்.

கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்.

அங்கு ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு உரசல் ஆரம்பிக்கிறது மாணவர்களுடன். இதற்கு முக்கிய காரணம் பவானி(விஜய் சேதுபதி). ஏனெனில் அந்த சிறுவர் சீர்த்திருத்த பள்ளி அவர் கண்ட்ரோலில் தான் உள்ளது. விஜய் பவானியிடமிருந்த அந்த சிறுவர்களை மீட்க போராடுகிறார்.

ஒரு கட்டத்தில் சண்டை JD Vs பவானியாக மாற, இருவருக்குமான யுத்தத்தில் கடைசியில் யார் வெற்றி, என்பதே மீதிக்கதை.

விஜய் ஒரு குடிகார ஆசிரியராக முதல் காட்சியில் தொடங்கும் கைத்தட்டல் கண்டிப்பாக கிளைமேக்ஸ் வரைக்கு நிற்காது போல…ஒவ்வொரு காட்சியிலும் தன் புது வகைவகை மேனரிசத்தால் பட்டாசு தான். அதுவும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களுடம் அவர் நடந்துக்கொள்வது, விஜய் சேதுபதியிடம் சவால் விடுவது, சட்டையை கழட்டி கபடியில் இறங்கி போட்டி போடுவது என படம் முழுவதும் விஜய்க்கான காட்சி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

அதே நேரத்தில் விஜய் படம் என்றாலே அவரை சுற்றி மட்டுமே தான் மாஸ் பில்டப் இருக்கும், ஆனால், அதில் மாஸ்டர் விதிவிலக்கு தான், ஆம், பவானியாக வரும் விஜய் சேதுபதி மாஸ் பண்ணியுள்ளார். அதிலும் இடைவேளை காட்சி இரண்டு பேருக்குமான போட்டி ஹை பாயிண்ட்.

படத்தில் விஜய் ஆசிரியராக வரும் கல்லூரி காட்சிகள் தான் ஏதோ தேவையில்லாததாக தெரிந்தது. ஒரு இண்ட்ரோ போல் கொடுத்து நேராக சீர்த்திருத்த பள்ளி காட்சிகளுக்கு சென்றிருந்தால் இன்னமுமே படம் சுவரஸ்யம் கூடியிருக்கும்.

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் உள்ளனர், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ் என பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், ஆண்ட்ரியா படத்தில் உள்ளார் என்றதும் ஏதோ முக்கியமான ரோல் தான் என்றால், ஏமாற்றம் தான், இதற்கு மாளவிகா ரோலே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் சண்டைக்காட்சிகள் தான், ஸ்டெண்ட் காட்சிகள் தான், சில்வா மெட்ரோ சண்டையில் ஆரம்பித்து, சட்டையில்லாமல் வரும் சண்டை, கபடியை சண்டையாக மாற்றி சில மூமண்ட்ஸ் என தெறிக்க விட்டுள்ளார். அதுவும் விஜய்-விஜய் சேதுபதிக்கான சண்டைக்காட்சி சூப்பர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு முதன் முதலாக லோகேஷ் படத்தில் பல காட்சிகள் வெளிச்சம் தெரிகிறது, அவரும் சிறப்பாக செய்துள்ளார், எடிட்டிங் மட்டும் இன்னும் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

முதல்பாதி கொஞ்சம் நீளம் என்றால் , இரண்டாம் பாதி செம்ம பாசிட்டிவாக தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் கொஞ்சம் சோர்வை தருகிறது

விஜய்-விஜய் சேதுபதி தாண்டி படத்தில் கண்களுக்கு தெரியாத ஹீரோ என்றால் அனிருத் தான், பின்னணி இசை, பாடல்கள் என ருத்ர தாண்டவம். எனினும் லோகேஷிடம் எதிர்பார்த்த ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகியுள்ள ஸ்டார் படம் என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *