பணம் வந்த கதை – பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!
நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு, “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டார் ஒரு தலைவர். “நாம் முதல் முதலாக தங்க நாணயங்களை வெளியிட்டோமே, நினைவிருக்கிறதா? வெளியார் யாரும் தங்கத்தை உருக்கி அவர்களே நாணயங்களை செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக நிர்வாக சபையின் ஒப்புதலுடன்…
