
பணம் வந்த கதை – பகுதி 8: Back to அய்யாவு’s story!
“எங்கே விட்டேன் அய்யாவு கதையை?” என்று கேட்டார் சேது. “சமூகத்துல பெரும் செல்வாக்கு உள்ளவனா ஆகணும் என்பதற்காக ஊர் மக்களையெல்லாம் கடனாளிகளாக்க திட்டம் போட்டான் என்று சொன்னீங்க” “கரெக்ட்.. அய்யாவு திட்டம் போட்டபடியே எல்லாம் நடந்தது. ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவனுடைய கடனை ஒட்டு மொத்தமாக அடைக்க விரும்பினாலும் அது நடக்காது என்பதை யாருமே உணரவில்லை. ‘பணம்’ என்ற ஒரு புதிய ‘வஸ்து’வின் மூலம் அவர்கள் அனைவரையும் அவன் தூண்டிலில் சிக்கிய மீன்…