இந்நேரம்

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை குறிவைத்து திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். ஈத் தினத்தன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதியின் முன் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது மற்றும் மிகவும் ஆத்திரமூட்டும்…

மேலும்...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வட இந்தியாவில் நிலவி வரும் அதீத வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில்…

மேலும்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து…

மேலும்...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த தேஜஸ்வினி, அங்கேயே தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். அவர்…

மேலும்...

செந்தில் பாலாஜி விடுதலையாவாரா? இன்று தெரியும்!

சென்னை (15 ஜூன் 2023): சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை…

மேலும்...

பாஜகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

புதுடெல்லி(10 ஜூன் 2023): அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.

மேலும்...
TN-Students

நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை (10 ஜூன் 2023): தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் தொடங்க உள்ளன. கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு திரும்பி வருவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி 10-ந் தேதி…

மேலும்...

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (08 ஜூன் 2023): வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:- கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது மேலும் ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன்…

மேலும்...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர்…

மேலும்...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான ‘கிருஷ்ணா’வில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார். நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், பன்மைத்துவத்தை அழிக்கும் பாஜகவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இது தொடர்பாக மக்களை எச்சரிக்க முன்வந்த எழுத்தாளர்களுக்கு…

மேலும்...