இந்நேரம்

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இறுதிச் சடங்கு முடிந்து உறவினர்கள் ஊர் திரும்பத் தொடங்கிய போது அவர் நண்பனின் தீயில்குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனந்த் (40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவரது நெருங்கிய நண்பர் உத்திர பிரதேசம் நாக்லா கங்கரை சேர்ந்த அசோக் (42). புற்றுநோயால்…

மேலும்...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுகுறித்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக…

மேலும்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் ‘சீ வேல்ட் அபுதாபி’ நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது விழாவில் எமிரட்டி சூப்பர் ஸ்டார் உசேன் அல் ஜாஸ்மின் மற்றும் ஸ்காட்ரிஸ்ட் ரெக்கார்டிங் கலைஞர் ரேட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன மேலும் 120 இசைக் கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது இந்த தீம் பார்க் இன் பொது மேலாளர் தாமஸ்…

மேலும்...

கேமராவில் சிக்கிய பெண் காவல் அதிகாரிகள் – வைரல் புகைப்படம்!

மும்பை (11 ஏப் 2023): விதிமுறைகளை மீறி வாகனத்தில் பயணம் செய்த இரு பெண் காவல் அதிகாரிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் செல்வதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார், இந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் சமூக ஊடகப் பயனர் ராகுல் பர்மன் என்பவர் பகிர்ந்துள்ளார். விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால், சட்டத்தைக் காப்பவர்களே விதிகளை மீறினால் என்ன செய்வது?

மேலும்...

நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….

மேலும்...

கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

சென்னை (03 ஏப் 2023): கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல்…

மேலும்...

ராம நவமி ஊர்வலத்தில் மதரஸா மற்றும் மசூதிகளுக்கு தீவைப்பு!

புதுடெல்லி (02 ஏப் 2023): பீகார் மாநிலம் நாலந்தாவில் ராம நவமி ஊர்வலத்தின்போது மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்கு தீ வைத்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையை தொடர்ந்து, பீகாரில் பல்வேறு இடங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க…

மேலும்...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் அதிமுகவுக்கு மாறினர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அக்கட்சியில் இருந்து பலர் மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர்…

மேலும்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை பாஜக பயன்படுத்துகிறது என்றும், என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் என யாராக இருந்தாலும், அவரை நம்பும்…

மேலும்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...