“தூக்கப்பட்டானா துபே..?”-உ.பி. காவல்துறையின் என்கவுன்டர் ஏடாகூடங்கள்!

லக்னோ (10 ஜூலை 2020): கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை ஒன்றில், உ.பி. காவலர்கள் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து, அந்த சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியும், உ.பி.-இன் முக்கிய குண்டா-வுமான விகாஸ் துபே இன்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கான்பூர் சம்பவத்துக்குப் பின்னர், ஆறு நாட்கள் கழித்து அச்சம்பவ தொடர்புடைய இந்த குற்றவாளி, மத்தியப் பிரதேச உஜ்ஜய்னி-இல் நேற்று கைது செய்யப்பட்டான். அவனை அங்கிருந்து கான்பூருக்கு, உத்தரப் பிரதேச சிறப்பு…

மேலும்...

அரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்!

திருவனந்தபுரம் (09 ஜூலை 2020): கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகப் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் ஒன்றுதான் இந்த தங்கத்தையும் அனுப்பி இருக்கக்கூடும் என்று…

மேலும்...

விசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது

கடந்த மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்.ஜி. நிறுவனத்திற்கு சொந்தமான, எல்.ஜி. பாலிமர்ஸ் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது நினைவிருக்கும். இந்த சம்பவத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைக் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைத்த உயர்மட்ட குழு, தனது விசாரணை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் எல்.ஜி. பாலிமர்ஸ்…

மேலும்...

மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது….

மேலும்...

கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!

புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் அதிகபட்சமாக ஏறக்குறைய 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது…

மேலும்...

முன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்!

பெங்களுரு (06 ஜூலை 2020): பெங்களுரில் ஆம்புலன்ஸ் பல மணிநேரங்கள் தாமதமாக வந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா உறுதியானதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலையிலிருந்து குடும்பத்தினர் முயற்சித்தும் ஆம்புலன்ஸ் வராமல் மாலை 7 மணிக்கு வந்துள்ளது. அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்ல சில தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்…

மேலும்...

கொரோனா தடுப்பூசிக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் – அறிவியல் நிபுணர் தகவல்!

புதுடெல்லி (05 ஜூலை 2020): கோவிட்-19 (கொரோனா) தடுப்பூசி சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. அந்த கேள்விக்கு உரிய பதிலை ஈமெயில் மூலம் சௌமியா சுவாமிநாதன் அனுப்பியுள்ளார். அதில்,…

மேலும்...

ஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து லடாக் விவகாரம் மற்றும் கொரோனா குறித்து பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக…

மேலும்...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா?

ஐதராபாத் (05 ஜூலை 2020): இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவராகும். இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து,…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 24,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக…

மேலும்...