இந்திய எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!

லடாக் (29 ஜூன் 2020): கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவிப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்று பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய படைகளுக்கும் சீன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 35 முதல் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 48 ஆயிரம்!

புதுடெல்லி (29 ஜூன் 2020):இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,83,18-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,459 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,475 பேர் உயிரிழந்த நிலையில் 3,21,723 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து…

மேலும்...

மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம்!

மணிப்பூர் (28 ஜூன் 2020): மணிப்பூர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.1 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நேற்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் . லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே…

மேலும்...

மோடி, அமித்ஷா நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் – காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜூன் 2020): சீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு, மற்றும் கொரோனாவை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை திசை திருப்பவே மோடி அரசு என்னிடம் அமலாக்கத்துறை விசாரணையை ஏவி விட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்றும் அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!

புதுடெல்லி (27 ஜூன் 2020): இந்தியாவில் ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பம்!

இம்பால் (26 ஜூன் 2020): மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் நால்வரும், மீண்டும் முதல்வர் பிரேன் சிங்கிற்கே ஆதரவு அளித்துள்ளனர். மணிப்பூரில் கடந்த 2017 தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜ கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் மூன்று பேர், என்பிபி கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள், எம்எல்ஏ உள்பட 9 பேர் முதல்வர் பிரேன் சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை…

மேலும்...

பீகார் மின்னல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு!

பாட்னா (26 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 30 பேர் இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். மேலும் கடந்த 2005 – 06…

மேலும்...

பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

கொரோனா மருந்து – தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு முதலில் விநியோகிக்க முடிவு!

புதுடெல்லி (25 ஜூன் 2020): நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கும் மருந்துக்கு இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கோவிஃபோர்(Covifor) என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான Remdesivir-ஐ சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றுள்ளது. இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது. நாட்டின்…

மேலும்...