குழந்தைகள் கண்முன்னே விஷம் குடித்த பெற்றோர்- மத்திய பிரதேசத்தில் பரிதாபம்!

போபால் (16 ஜூலை 2020): குழந்தைகளின் கண் முனபாகவே பூச்சிக் கொல்லி மருந்துகளை பெற்றோர் உட்கொண்ட பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராம்குமார் அஹிர்வார் என்ற தலித் விவசாயி அரசு இடத்தில் தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த இடத்தில் ஒரு கல்லூரி கட்ட குணா நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக அந்த விவசாயியை காலி செய்ய சொல்லி வந்துள்ளனர். இதற்கு அவர்…

மேலும்...

பிரபல தெலுங்கு கவிஞருக்கு சிறையில் கொரோனா பாஸிட்டிவ்!

மும்பை (16 ஜூலை 2020): ஜனவரி 01, 2008 அன்று நடைபெற்ற கொரேகாவ்ன் பீமா வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய எல்கார் பரிஷத் வழக்கு சம்பந்தமாக பல்வேறு பேராளி மற்று சமூக ஆர்வலர் குழுக்களின் தலைவர்கள் தேசிய பாதுகபப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரபல தெலுங்கு கவிஞர் வாரவர ராவ்-வும் 2018-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். குறைந்தபட்சம் அவருடைய வயது மூப்பைக் கருத்தில் கொண்டாவது அவரை விடுதலை செய்ய வேண்டும் என…

மேலும்...

92 தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஜாமீன்-டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று…

மேலும்...

ஆன்லைன் வகுப்புக்காக ஃபேஸ்புக்குடன் இணையும் சிபிஎஸ்இ!

புதுடெல்லி (16 ஜூலை 2020): இணைப்பில் நிஜமாக்கல்’ என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக்குடன் இணைந்து செயலாற்ற சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த முறை இருக்கும். தற்போதைய கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும். இதற்காக ஆசிரியர்களுக்கு 3 வாரப்பயிற்சி முகாம் 5 கட்டமாக நடக்கவுள்ளது. இந்த பயிற்சி பேஸ்புக்கின்…

மேலும்...

ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் விடுமுறை அளித்து அதிர வைத்த நிறுவனம்!

புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன்,…

மேலும்...

இராஜஸ்தான் நெருக்கடி..? பரிதவிப்பில் பா.ஜ.க., குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (15 ஜூலை 2020): “பா.ஜ.க.-வுக்கு தாவப் போகின்றார், தனிக்கட்சி தொடங்கப் போகின்றார்” என்று கடந்த த்திலிருந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வரும் இராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அப்பதவியிலிருந்து நீக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் தோஸ்தரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மைக்கு சங்கடங்கள் ஏற்படுத்தலாம், ஆனால் அதனை தோற்றகடிக்க இயலாது’ என்று பதிவிட்டுள்ளார் சச்சின். பைலட்டு-க்கு ஆதரவாக 30…

மேலும்...

யோகி அரசை’ கடுமையாக சாடும் பிராமண அமைப்புகள்!

லக்னோ (15 ஜூலை 2020): காலம்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பிராமணர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக, உ.பியில் ஆட்சி அமைத்ததிலிருந்து, பிராமணர்கள் உ.பியில் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், அது தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். விகாஸ் துபே என்பவர் உ.பி.- இ ல் மிகப்பெரும் தாதாவாக செயல்பட்டு வந்தார். எட்டு காவலர்களை கொலை செய்த இவர் மீது கடும் ஆத்திரத்திலிருந்த காவல்…

மேலும்...

அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் இடம் புத்த மதத்திற்கு சொந்தம் – புத்த பிக்குகள் போராட்டம்!

அயோத்தியா (15 ஜூலை 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று புத்த பிக்குகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது இராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சமீபத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, நிலத்தை சமன்செய்ததில் பல்வேறு உடைந்த சிலைகள், சிவப்பு மணற்கல் தூண்கள், உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை புத்தமதத்தின் கலாச்சாரத்திற்கு சொந்தமானது என்று புத்தபிக்குகள் தெரிவித்துள்ளனர். மேலும்…

மேலும்...

கொரோனாவும் அரசு வேலையும் – மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு!

கொல்கத்தா (15 ஜூலை 2020): கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த கிளப்பில்,…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (15 ஜூலை 2020): இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 582 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...