ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள் என்ன..? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவைகளை எல்லாம் கீழே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம். கடந்த 30 ஜூன் 2020 வரை, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், எந்த வங்கி ஏடிஎம்-ல் இருந்தும் எவ்வளவு வேண்டுமானாலும் பணக் எடுக்கலாம் என்று விதியை தளர்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி புதிய விதிகளைப்…

மேலும்...

மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மும்பை (04 ஜூலை 2020): கொரொனாவால் மகாராஷ்டிர பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வானிலை மைய்யம் அறிவிப்பால் பீதியில் உள்ளனர் மும்பை மக்கள். மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை…

மேலும்...

இந்தியர்களைத் திரும்ப அனுப்பியது சீனா!

புதுடெல்லி (01 ஜூலை 2020): இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட…

மேலும்...

குப்பை கொட்டுவதுபோல் வீசப்படும் கொரோனா சடலங்கள்!

பெங்களூரு (01 ஜூலை 2020): உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனும் எச்சரிக்கை இருப்பினும், எதனையும் கவனத்தில் கொள்ளாமல், பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே குழியில், ஏதோ குப்பைய் கொட்டுவது போல் சுகாதாரத்துறையினர் வீசும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில்…

மேலும்...

நெற்றியில் குங்குமம் வைக்க மறுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

கவுஹாத்தி (01 ஜூலை இந்து மத முறைப்படி குங்குமம் மற்றும் வளையல்கள் அணிந்துகொள்ள மறுத்த மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தம்பதியினருக்கிடையே திருமணம் ஆன கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே பிரச்சனை இருந்துள்ளது. மேலும் இந்து மதத்தில் திருமணமான பெண்கள் கண்டிப்பாக நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் மேலும் வளையல்களும் அணிய வேண்டும். அதுவே திருமணமான பெண்ணிற்கான அடையாளமாகும். ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள்…

மேலும்...

நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர் உரை!

புதுடெல்லி (30 ஜூன் 2020): 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மாலை 4 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “அன் லாக் 2.0 தொடங்கி விட்டது. பொது முடக்கத்தில் தளர்வுகள் அளித்தாலும் முன்பை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். கரோனா காரணமாக பொது முடக்க தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சுற்றுகிறார்கள். இது மிகப்பெரிய தவறான முன்…

மேலும்...

மணமகன் மரணம் – திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று!

பாட்னா (30 ஜூன் 2020): பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு…

மேலும்...

டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு இந்தியாவில் தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 ஜூன் 2020): டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமாக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில்…

மேலும்...

சீன ஒப்பந்தம் ரத்து – பீகார் அரசு அதிரடி உத்தரவு!

பாட்னா(29 ஜூன் 2020): சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கும் சீன ராணுவம், சமீபத்தில் பெரும் மோதலை நடத்தியது. 20 இந்திய வீரர்கள் இறந்தனர்; பதிலடியில் 30 சீன ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்தது. இதனையடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலர் நோ சீனா பொருட்கள் ஆதரவாக கருத்து…

மேலும்...

காஷ்மீர் ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு தலைவர் சையது அலி ஷா கிலானி திடீர் விலகல்!

ஜம்மு (29 ஜூன் 2020): காஷ்மீர் அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பிலிருந்து அதன் தலைவர் சையது அலி ஷா கிலானி அவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு அனைத்து ஹூரியத் மாநாடு. இதன் தலைவராக இருந்து வந்தவர் சையது அலி ஷா கிலானி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு நீக்கியது….

மேலும்...