பாசிசவாதிகளின் பிடியில் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று…

மேலும்...

இராமன் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை – நேபாள பிரதமர் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என்று நேபாள பிரதமர் ஒளி அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா-வின் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை விதித்த பின்னர் நேபாள பிரதமர் அதிரடியாக ஒரு விஷயத்தை போட்டுடைத்திருக்கின்றார். எந்த இராமனை முன் வைத்து சங்க அமைப்புக்கள் ஆட்சிக் கட்டில் ஏறினவோ, அந்த இராமன் இந்தியாவுக்கு உரியவன் அல்ல, அவனுடைய பிறப்பிடம் நேபாளம் என்று அதிரடிக் கருத்தைத் தெரிவித்து சங்க அமைப்புக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றார்….

மேலும்...

மரங்களை கட்டிப்பிடிக்கும் மக்கள் ஏன்? – இன்றைய செய்தி துளிகள்!

மேகாலயாவில் கொரோனா சமூக விலகல் விதிகளை மீறி நடந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ============ ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ============== இஸ்ரேலில் மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து கொரோனாவிலிருந்து பாதுகாப்பு…

மேலும்...

ஸ்வப்னா சுரேஷ் கைதும் பரபரப்பு பின்னணியும்!

திருவனந்தபுரம் (13 ஜூலை 2020): தங்கக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட ஸ்வப்னா சுரேஷ் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக்வே தங்கக் கடத்தலில்ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற, தூதரக…

மேலும்...

அலறும் மகாராஷ்டிரா – கையை பிசையும் அரசு!

மும்பை (13 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,924- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 10,482-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது மகாராஷ்டிராவில் கொரோனா…

மேலும்...

இந்தியாவில் 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (13 ஜூலை 2020): இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றத்திற்காக 75,000 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்யும் என அதன் செயல் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்த முதலீடு ஐந்து முதல் ஏழு வருடங்களில் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முதலாவதாக ஒவ்வொருவரும் தத்தமது தாய் மொழிகளிலேயே வலைதளங்களை அணுகுவதான வசதி இரண்டாவதாக, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் மூன்றாவதாக, வணிகத் துறைகளில் அவற்றின் டிஜிட்டல்…

மேலும்...

வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பணம் எடுப்போருக்கு வருமான வரித்துறையின் திடீர் அறிவிப்பு!

மும்பை (14 ஜூலை 2020): வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்றும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் வருமான வரிந்த்துறை அறிவித்துள்ளது,. இதன்படி வருமான வரி செலுத்தாதவர்கள், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால்…

மேலும்...

மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்!

புதுடெல்லி(12 ஜூலை 2020): மிசோரம் மாநிலத்தில் மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாம்பாய் மாவட்டத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 2.28 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு…

மேலும்...

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் டெங்கு காய்ச்சல் – கவலையில் பொதுமக்கள்!

புதுடெல்லி (12 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறமிருக்க டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவிவருகிறது. இது இப்படியிருக்க ஒருபுறம் டெங்கு காய்ச்சலும் அதிக அளவில் பரவிவருகிறது. இப்போது வரும் நோயாளிகளில் காய்ச்சல் வந்தாலே அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்கிற நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதால் டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவத்துறை…

மேலும்...

ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

புதுடெல்லி (11 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதேபோல் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,123 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை5,5,15,386 ஆகவும் உயர்ந்திருப்பதாக சனிக்கிழமை அன்று மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது. மேலும் கொரோனா சார்ந்த மரணங்களில் 70% ஏனைய நோய்களுடன் இணைந்த பாதிப்பில் நிகழ்ந்ததாகவும் அமைச்சகம்…

மேலும்...