ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரி மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை!

புதுடெல்லி (15 மே 2020): ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மலேசியாவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் கடந்த மூன்று வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். டாக்காவில் கடந்த் அ2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்துள்ள நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி. இந்திய அரசு முறையாக கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர்…

மேலும்...

பிரதமர் நிதி குறித்து பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

புதுடெல்லி (14 மே 2020): “PM-CARES, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட தொகையானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு…

மேலும்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில், ரூபாய் 3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கடன் பெறும் விவசாயிகள் முதல் 3…

மேலும்...

தொடரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கொரோனா ஊரடங்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த…

மேலும்...

முத்தலாக் சட்டம் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு விலக்கா? – குமுறும் பாதிக்கப்பட்ட குடும்பம்!

லக்னோ(14 மே 2020): உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவருக்கு, அலிகாரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவருடன் ஜனவரி 8, 2013-இல் திருமணம்நடைபெற்றுள்ளது. தற்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ. 10 லட்சம்வரதட்சணையாக கேட்டு, ரபத் ஜெஹானைத் துன்புறுத்தி வந்த அப்துல் ரஹீம், கடந்த 2018 நவம்பரில் 10-இல் திடீரென முத்தலாக் கூறிவிவாகரத்து செய்துள்ளார். ரபத் ஜெஹான்,…

மேலும்...

அரசுத் தரப்பிலிருந்து வருவது 4 லட்சம் கோடி மட்டுமே – கபில் சிபல் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 மே 2020): நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையில், அரசிடம் இருந்து வரும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அரசிடமிருந்து வரும் உண்மையான நிவாரணத் தொகை 4…

மேலும்...

பிரதமரின் 8 PM அறிவிப்புகள் பயன் தருமா? ஓர் அலசல்

கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, நான்காவது முறையாக நேற்று (மே 12, 2020) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்காக இந்தியில் உரையாற்றினார். ஒவ்வொரு உரையின் போதும் புதிய அறிவிப்புகளைச் செய்து மக்களை கடைபிடிக்க வலியுறுத்தி வந்த பிரதமர் மோடி, இம்முறை பொருளாதாரம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்மூலம் மறுநாள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்திருந்தார். அரசு தரப்பில் முன்னேற்பாடுகள் எதுவுமின்றி வெறும் நான்கு மணிநேர அவகாசத்தில் முதல் ஊரடங்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பெண் மருத்துவர் இங்கிலாந்தில் மரணம்!

லண்டன் (13 மே 2020): கொரோனா பாதிப்பால் இந்திய மருத்துவர் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 55 வயதான டாக்டர் பூர்ணிமா நாயர் கேரளாவில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஸ்டேஷன் வியூ மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உயிருக்கு போராடி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மேலும்...

ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

மேலும்...

ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி:…

மேலும்...