லக்னோ(14 மே 2020): உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவருக்கு, அலிகாரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவருடன் ஜனவரி 8, 2013-இல் திருமணம்நடைபெற்றுள்ளது.
தற்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ. 10 லட்சம்வரதட்சணையாக கேட்டு, ரபத் ஜெஹானைத் துன்புறுத்தி வந்த அப்துல் ரஹீம், கடந்த 2018 நவம்பரில் 10-இல் திடீரென முத்தலாக் கூறிவிவாகரத்து செய்துள்ளார்.
ரபத் ஜெஹான், இதுதொடர் பாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதிஅலிகார் சிவில் லைன் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களும் விசாரணைக்கு பின் டிசம்பர் 1-இல் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் ரஹீமை போலீசார் கைது செய்யவில்லை.பாதிக்கப்பட்ட ரபத் ஜெஹானின் சகோதரர், இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசுகையில்,, ‘முத்தலாக் கூறியஅப்துல் ரஹீம், பாஜகவின் மாநில நிர்வாகி என்பதாலேயே போலீசார் அவரைக் கைது செய்யாமல்காப்பாற்றப் பார்க்கிறார்கள்; அவர்களாகவே, எங்கள் இரு குடும்பங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக போலி ஆவணங்களைக் காட்டுகின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, பாஜக பிரமுகர் அப்துல் ரஹீம், டெல்லி கேட்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..