கொரோனா வைரஸ் பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் மரணம்!

குர்ணுல் (24 ஏப் 2020): ஆந்திர மாநிலம் குர்ணூலை சேர்ந்த புகழ் பெற்ற இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் (76) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். டாட்கர் இஸ்மாயில் ஹுசைன் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ஆனால் சில தினங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவர் மரணித்த பின்பே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியது. அதுவே அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை…

மேலும்...

அமைச்சர் உட்பட ஒரேநாளில் 778 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

மும்பை (24 ஏப் 2020): மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அம்மாநிலத் தலைநகர் மும்பையின் நிலை மோசமாகி வருகிறது. மஹாராஷ்ட்ராவின் மொத்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 427…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (24 ஏப் 2020): தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரகால இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், சாமியார்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக, திரு. அர்னாப் கோஸ்வாமியும் புகாரளித்தார். இந்நிலையில்,…

மேலும்...

இத்தனை பேரை கொரோனா பாதிக்குமா? மும்பைக்கு மத்திய குழு கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 ஏப் 2020): மும்பையில் வரும் மே 15-ம் தேதிக்‍குள் 6 லட்சத்து 50 ஆயிரம் மக்‍கள் கொரோனாவால் பாதிக்‍கப்படும் அபாயம் இருப்பதாக மத்தியக் குழு எச்சரித்துள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது. நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தலா 5 பேர் அடங்கிய 2 குழுக்‍களையும் மத்திய அரசு அமைத்தது….

மேலும்...

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவரை தாக்கினால் கடும் தண்டனை- அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி (23 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். ‘கொரோனா’ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, தாக்‍கியவர்கள் மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு…

மேலும்...

முஸ்லிம் என்பதால் டெலிவரி மென் கொண்டு சென்ற பொருளை வாங்க மறுப்பு!

மும்பை (23 ஏப் 2020): மளிகை பொருட்களை டெலிவரி செய்பவர் முஸ்லிம் என்பதால் அவரிடமிருந்து பொருட்களை வாங்க மும்பையில் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மும்பை கஷ்மீரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், , சுப்ரியா சத்ருவேதி டெலிவரி ஏஜென்சியிடம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருட்களை பர்கத் பட்டேல் என்ற டெலிவரி மென் சுப்ரியா வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சுப்ரியாவின் கணவர் சத்ருவேதி பர்கத் பட்டேலிடமிருந்து பொருட்களை வாங்க…

மேலும்...

ஹலோ சோனு நிகாம் துபாயில் பாங்கோசை கேட்குதா? – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

துபாய் (22 ஏப் 2020): இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்வாவினரின் செயல்பாடுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. 2014ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், படுகொலைகள் என எல்லாம், தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கொரோனாவை மறந்து பலரும் இதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். போதாதற்கு இந்துத்வா ஆதரவு சினிமா கலைஞர்கள், தலைவர்கள் முதல் சாதாரண இந்துத்வா பதிவாளர்கள் வரையிலான ட்விட்டர் பதிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனத்திற்கு…

மேலும்...

நான் தலைமறைவாக இருந்தேனா? – மனம் திறந்த தப்லீக் ஜமாத் தலைமை இமாம்!

புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா ரேபிட் கிட் சோதனை முறை நிறுத்தம்!

புதுடெல்லி (22 ஏப் 2020):சோதனை முடிவுகள் துல்லியமான முடிவுகளை தராததால், 2 நாட்களுக்கு சோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால்,…

மேலும்...

ரேப்பிட் கிட்டில் தவறான முடிவுகள் – கொரோனா சோதனையை நிறுத்தி வைத்தது ராஜஸ்தான் அரசு!

ஜெய்ப்பூர் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் சோதனை முறையான ரேப்பிட் கிட்ஸில் எடுக்கப்படும் முடிவுகள் தவறானவையாக உள்ளதால் இந்த முறையை நிறுத்தி வைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட்…

மேலும்...