டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்….

மேலும்...

மாதவிடாய் காலம் – மாணவிகளை தீண்டாமை கொடுமையில் தள்ளிய கல்லூரி!

அஹமதாபாத் (15 பிப் 2020): குஜராத் மாநிலத்தில் மாணவிகளை ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மற்ற மாணவிகளுடனும், பேசவோ பழகவோ கூடாது என்றும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில் கல்லூரி விடுதி…

மேலும்...

சிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை – நீதிமன்றம் அதிரடி!

பெங்களூரு (14 பிப் 2020): மாணவர்களை அவசியமின்றி துன்புறுத்திய போலீஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மாணவர்களை கேள்வி மேல் கேட்டு துன்புறுத்தியது. மேலும்…

மேலும்...

சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

லக்னோ (14 பிப் 2020): டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவர் வரும் திங்கள் கிழமை ஜாமீனில் வெளியாவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்…

மேலும்...

டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு…

மேலும்...

மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை – கவிஞர் ஜாவெத் அக்தார்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை. என்று பிரபல கவிஞர் ஜாவெத் அக்தார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஜாவெத் அக்தார், இயக்குநர் மகேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் ஜாவெத் அக்தார் மோடி பாசிஸ்டு என்பதை ஆணித்தரமாக கூறினார். மேலும் மோடியின் கூட்டத்தாரின் தலையில் கொம்பு முளைத்துவிடவில்லை. அவர்கள்தான் சிறந்தவர்கள் என்பது போலவும் மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்பது போலவும் நினைக்கிறார்கள். இதுவே பாஸிஸ்டு என்பதற்கு அடையாளம். மேலும் மக்கள்…

மேலும்...

தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர் – VIDEO

திருவனந்தபுரம் (13 பிப் 2020): தன்னைப் பற்றிய செய்தியை தானே வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா ஷியாம். கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையாள தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரள அரசு சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார். தன்னுடைய புகைப்படமும்…

மேலும்...

பிரதமர் மோடியின் ஒரு நாள் செலவு ₹ 1.62 கோடி!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் ஒரு நாள் செலவு ₹ 1.62 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது. இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு…

மேலும்...

அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு…

மேலும்...

நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு! – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால்…

மேலும்...