பி.எஸ்.என்.எல் மூடலா? – மத்திய அரசு விளக்கம்!

புதுடெல்லி (06 பிப் 2020): பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் மூடப்படாது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைசசர், “பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட்’ மற்றும் எம்.டி.என்.எல்., எனப்படும், ‘மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடட்’, ஆகிய நிறுவனங்களை மூடமாட்டோம். அவற்றை வலுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்நிறுவனங்களின் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும்,…

மேலும்...

நாங்கள் இஸ்லாமியர்களாக நினைக்கவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (06 பிப் 2020): இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை நாங்கள் இந்தியர்களாக பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், மாணவ அமைப்பினரும், சிறுபான்மையினரும் போராடி வருகின்றனர். இத்திருத்த சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியும் வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்கள் எதிர்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும், எங்களுக்கு இந்தியர்களே” என…

மேலும்...

ஷஹீன் பாக் ஜாலியன் வாலாபாக்காக மாறும் அபாயம் – உவைசி எச்சரிக்கை!

புதுடெல்லி (06 பிப் 2020): டெல்லி ஷஹின் பாக் போராட்டக் காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தக்கூடும் வாய்ப்பு இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை…

மேலும்...

105 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பாட்டி!

கொல்லம் (06 பிப் 2020): கேரளாவில் 105 பாட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதித்து பலரது பாராட்டை பெற்றுள்ளார். கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில்…

மேலும்...

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்!

மீரட் (05 பிப் 2020): மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் என்பவருக்கும், ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரிப்பை விட ரோஷ்ணி மிகவும் அழகாக இருப்பார். மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் ஆரிபிற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் சந்தேக தீயாக மாறி, தன் மனைவியின் அழகை…

மேலும்...

செல்பி எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் செல்போன் அபேஸ்!

சண்டீகர் (05 பிப் 2020): பஞ்சாப்பில் சாலையின் ஓரமாக நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் செல்போனை திருடர்கள் பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இரண்டு பெண்கள் சாலை ஓரமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சாலையில் நின்றவாறு திருடன், திருடன் என்று கத்தியுள்ளனர். அப்போது அதே சாலையில் சென்ற பொதுமக்கள்…

மேலும்...

பாஜகவுக்கே வாக்களியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (05 பிப் 2020): பாஜக கூறுவதுபோல் நான் பயங்கரவாதி எனில் தாமரை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் பிப்.,08 ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தின்போது, பாஜ எம்பி., பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே டில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்பவர், ஆம்ஆத்மி உறுப்பினர் என டில்லி போலீஸ் கூறியதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது….

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...

ராமர் கோவில் அறக்கட்டளையில் தலித்துகளும் சேர்ப்பு – அமித் ஷா தகவல்!

புதுடெல்லி (05 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கத்தால் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று அதன் அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அறங்காவலர்கள் தொடர்பான அறிவிப்பை  அமித்…

மேலும்...

முஸ்லிம் பெண்களை கண்டு பிரதமர் மோடிக்கு ஏன் அச்சம்? – உவைசி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2020): முஸ்லிம் பெண்களின் சகோதரனான பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பெண்களை கண்டு ஏன் அச்சப்படுகிறார்? என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது , குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷஹீன் பாக்கில் டிசம்பர் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். இதற்கு AMIM தலைவர் உவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி, எ.பி.ஆர் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமை…

மேலும்...