பாஜகவுக்கே வாக்களியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

Share this News:

புதுடெல்லி (05 பிப் 2020): பாஜக கூறுவதுபோல் நான் பயங்கரவாதி எனில் தாமரை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் பிப்.,08 ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தின்போது, பாஜ எம்பி., பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே டில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்பவர், ஆம்ஆத்மி உறுப்பினர் என டில்லி போலீஸ் கூறியதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து தெரிவிக்கையில், . தேர்தலுக்காக பாஜ.க,வினரின் அரசியல் ஸ்டண்ட் தான் இது. போலீஸை பாஜக பயன்படுத்துகிறது.

நான் எனது குடும்பத்துக்காகவோ அல்லது என் குழந்தைகளுக்காகவோ எதையும் செய்யவில்லை, நாட்டு சேவையில் என்னை அர்ப்பணித்தேன். ஐஐடி.,யில் என்னுடன் படித்த 80 சதவீதத்தினர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர். நான் வருமான வரி கமிஷனர் பணியில் இருந்து விலகினேன். என்னை ஹிந்து மதத்திற்கு விரோதமானவன் என்கின்றனர். நான் தீவிரமான ஹனுமன் பக்தர். பாஜ., இம்முறை ஷஹீன் பாக் பற்றி மட்டும் பிரசாரம் செய்கிறது. அதைத்தவிர பிரசாரம் செய்ய வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.

பாஜ க., எம்பி பர்வேஷ் வர்மா என்னை பயங்கரவாதி என்று கூறியபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு டெல்லி மக்களே பதிலளிக்கட்டும். பிப்ரவரி,08ம் தேதி நடக்கும் தேர்தலில் நான் பயங்கரவாதி எனில் அவர்கள் ‘தாமரை’ சின்னத்திலும், இல்லையெனில் ‘துடைப்பம்’ சின்னத்திலும் ஓட்டளிக்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply