புதுடெல்லி (06 பிப் 2020): இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை நாங்கள் இந்தியர்களாக பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், மாணவ அமைப்பினரும், சிறுபான்மையினரும் போராடி வருகின்றனர். இத்திருத்த சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்கள் எதிர்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும், எங்களுக்கு இந்தியர்களே” என கூறியுள்ளார்.