தலித் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரத்தின் உச்சம்!

அஹமதாபாத் (13 ஜன 2020): குஜராத்தில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், வண்புணர்வு செய்யப்பட்டதோடு, அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...

யார் என்ன முயற்சித்தாலும் ராமர் கோவில் கட்டியே தீருவோம் – அமித் ஷா திட்டவட்டம்!

புதுடெல்லி (12 ஜன 2020): காங்கிரஸ் என்ன முயற்சித்தாலும் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “காங்கிரஸ் மக்களே, கேளுங்கள் … உங்களால் முடிந்தவரை (CAA) நீங்கள் எதிர்கலாம். ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு அகதிக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

மேலும்...

காஷ்மீரில் மூவர் சுட்டுக் கொலை!

புல்வாமா (12 ஜன 2020): காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும்...

வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருகை புரிந்த பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள்!

கொச்சி (12 ஜன 2020): கேரளாவில் பல்வேறு மத முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் பெரிய ஜும்மா பள்ளிக்கு வருகை புரிந்தனர். ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சி பெரிய ஜும்மா மசூதி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நீதிபதி அலெக்‌சாண்டர் தாமஸ், சுவாமி குருரத்னம் ஞான தவசி, ஃபாதர் வில்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்பு சொற்பழிவை கேட்டனர். பின்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...

கேள்விகளால் பாஜக தலைவரை பிழிந்தெடுத்த கன்னையா குமார் – வீடியோ!

புதுடெல்லி (11 ஜன 2020): ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான விவாத மேடையில் பாஜக தலைவரை அலற விட்டுள்ளார் கன்னையா குமார். சமீபத்தில் இந்துத்வா அமைப்பினரால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொடூரமாக தாக்கப் பட்டனர். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா டிவி நடத்திய விவாதம் ஒன்றில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரும் தற்போதைய சிபிஎம் தலைவருமான கன்னையா குமார் மற்றும் பாஜக தலைவர் அமிதாப் சின்ஹா ஆகியோர்…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள்…

மேலும்...

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது!

ஜார்கண்ட் (10 ஜன 2020): பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ருஷிகேஷ் தேவ்திகர் ஜார்க்கண்ட்டில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) அவரது வீட்டுக்கு அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்துத்வா அமைப்புகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததற்காகவே…

மேலும்...

ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி!

சித்தூர் (10 ஜன 2020): குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி ( அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் ஜெயகன் மோகன் ரெட்டி பேசியதாவது: தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய ஒவ்வொரு தாய்க்கும் ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய் மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் தயங்குகின்றனா்….

மேலும்...