
டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!
புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…