அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில்…

மேலும்...

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறாக பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு!

பார்மர் (06 பிப் 2023): : ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் மத வெறுப்பு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பதஞ்சலி நிறுவன உரிமையாளரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 அன்று துறவிகள் கூட்டத்தில் பாபா ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் திரும்புவதாகவும், இந்துப் பெண்களைக் கடத்துவதாகவும் ராம்தேவ் பேசியுள்ளார். மேலும் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்…

மேலும்...

ஷர்ஜீல் இமாம் சிறையில் தொலைத்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? – ப.சிதம்பரம் கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2023): ஷர்ஜீல் இமாம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இழந்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இது தொடர்பான…

மேலும்...

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (04 பிப் 2023): அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகம் இதுகுறித்து விசாரனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானியின் நிதித் தகவல்கள் மற்றும் பதிவுகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு இதுவே முதல் விசாரணை. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானாலும், அதானி குழுமத்தை ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானிக்கு ஒன்றிய அரசு உதவி செய்வதாகவும்…

மேலும்...

அதானி மோசடி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி பங்குச்சந்தை மோசடி சர்ச்சையை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன், பென்னி பஹானன் ஆகியோர் லோக்சபாவில் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதானி பங்கு சர்ச்சை குறித்து விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் அவசர மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் முழக்கங்களை…

மேலும்...

அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வழங்கிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்….

மேலும்...

அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை…

மேலும்...

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. உ.பி சிறையிலிருந்து வெளிவந்த பின் சித்திக் கப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “உத்திர பிரதேச அரசு என் மீது பொய்யான வழக்கு…

மேலும்...

ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என இருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி…

மேலும்...