சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு…

மேலும்...

ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஸ்டால்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் பூங்கா மற்றும் அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவும் முன் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலும்...

சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை, தூசி நிறைந்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கா,…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வெளியே செல்லும் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமாவில் காலை முதல் பலத்த மழை பெய்து…

மேலும்...

சவூதியில் பசுமை ரியாத் திட்டத்தின் மூலம் அதிக மரங்கள் நட முடிவு!

ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிரீன் ரியாத்’ என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் 78 வாகன நிறுத்துமிடங்களில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 29ம் தேதி முதல் ஜனவரி…

மேலும்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது. பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும். கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு…

மேலும்...

சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!

ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அதிகமான சேவைகளை மின்னணுமயமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து வாகனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதிகள் இனி அப்ஷர் இயங்குதளம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி, அதில் உள்ள மூன்று படிகளை முடிக்க வேண்டும் என்று அப்ஷர் சேவைத் துறை தெரிவித்துள்ளது….

மேலும்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய விமானி அமீர் ரஷீத்!

ரியாத் (28 டிச 2022): பல வருடங்களுக்குப் பிறகு தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் சமூக வலைதள பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமீர் ரஷீன் வானி என்கிற விமானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் “புனித மக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது எனது பள்ளிப் பருவத்திலிருந்தே தனது தாயின் ஆசையாக இருந்தது, அதனை நான் இயக்கும் விமானத்திலேயே அழைத்துச் சென்று தற்போது நிறைவேற்றியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமீரின் ட்வீட்டில்,…

மேலும்...