டிஜிட்டல் வங்கியாக செயல்படும் சவூதி எஸ்.டி.சி பே!

ரியாத் (23 ஜூன் 2021): எஸ்.டி.சி பே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்களிடையே பிரபலமாக உள்ளது. சவூதி அரேபியாவின் பிரபலமான ஆன்லைன் வால்லட் எஸ்.டி.சி பே இப்போது டிஜிட்டல் வங்கியாக செயல்படும். இதற்கு சவுதி மத்திய வங்கி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் நிறுவனம் இந்தத் துறைக்கு அதிக மூலதனத்தைக் கொண்டு வரும் என்றும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு திடீர் நிறுத்தம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): பயணத் தடை தொடர்பான தெளிவான அறிப்பு இல்லாததால், விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெறுவதுடன், பயணம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் ஆன சான்றிதழை வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் இன்று முதல் துபாய் செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ஆனால் விமான சேவை இன்று தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த பெரிய…

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (21 ஜூன் 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை அடுத்து அங்கிருந்து இந்தியர்களுக்கு பயணம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கான பயணத்தடையை நீக்குகிறது. அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கிகரித்துள்ள தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயில்…

மேலும்...

சவூதியில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம்!

ரியாத் (18 ஜுன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசுக்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் நியமனங்களை ஒத்திவைப்பதாக சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை வழங்குவதற்காகவும் இரண்டாவது டோஸ் முன்பதிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது…

மேலும்...

முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1முதல் குவைத் வர அனுமதி!

குவைத் (18 ஜுன் 2021): முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் முதல் குவைத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மெடோனா அஸ்ட்ரா சேனகா மற்றும் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும், ஜான்சன் & ஜான்சன் ஒரு டோஸையும் பூர்த்தி செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதி வழங்கப்படும் குவைத் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் நெகட்டிவ்…

மேலும்...

சவூதி அரேபியா கோவிட் வரைமுறைப்படி வெளிநாட்டு பயணிகள் – முகீம் பதிவும் நடைமுறையும்!

ரியாத் (18 ஜுன் 2021): சவூதி அரேபியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் முகீம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கோவிட் 19 நடைமுறைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி போடப்பட்ட அல்லது போடாதவர்கள் சவூதி அரேபியாவுக்கு வரும்போது முகீம் பதிவு கட்டாயமாகும். சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பதிவு முடிக்கப்பட வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லை நுழைவுகளில் நெரிசலைக் குறைக்கவும்…

மேலும்...

இஸ்ரேலில் முடிவுக்கு வந்த நெதன்யாகுவின் ஆட்சி!

ஜெருசலேம் (14 ஜூன் 2021): இஸ்ரேலின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இந்நிலையில் அரபு கட்சி தலைமையில் 8…

மேலும்...

இவ்வருடம் சவுதியில் வசிக்கும் 60,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி!

ரியாத் (13 ஜூன் 2021): முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இவ்வருடம் ,60,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய…

மேலும்...

இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு சவூதி வர அனுமதி!

ரியாத் (07 ஜூன் 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடுபவர்கள் சவுதி வரும்போது தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்க சவூதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவூதி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடுவதற்காக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் முகீம் போர்ட்டலில் தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்க வேண்டும்….

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா விமானபோக்குவரத்தை தொடங்க மீண்டும் பேச்சுவார்த்தை!

ரியாத் (03 ஜூன் 2021): இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் அவுசாஃப் சயீத் மற்றும் சவூதி சிவில் ஏவியேஷன் தலைவர் இருவருக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவதால் பயணம் மீண்டும் தொடங்கும் என்று…

மேலும்...