சவூதி அரேபியாவில் அனைத்து சரவதேச விமான சேவைகளையும் மார்ச் 31 முதல் மீண்டும்தொடங்க முடிவு!

ரியாத் (08 ஜன 2021): சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து வான்,…

மேலும்...

சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு…

மேலும்...

சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போட பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரியாத் (06 ஜன 2020): சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. கோவிட் 19 பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் முதல் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள் நாட்டு வெளி நாட்டினர் அனைவரும் செஹாத்தி அப்ளிகேஷன் பயன்பாட்டின் மூலம் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய…

மேலும்...

ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்...

சவூதி கத்தார் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு – குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

ரியாத் (04 ஜன 2020): சவூதி மற்றும் கத்தார் இடையே தரை மற்றும் வான்வழி போக்குவரத்து மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா திங்களன்று தெரிவித்தார். சவூதி மற்றும் கத்தார் எல்லைகளை திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.  

மேலும்...

சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை நீக்கம்!

ரியாத் (03 ஜன 2021): சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை ஜனவரி 3 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு, அனைத்து எல்லைகளும் இன்று திறக்கப்படுகின்றன. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிவேக வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி எல்லை மூடப்பட்டது. இந்நிலையில் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் இப்போது நாட்டிற்குள் நுழையலாம். சவுதி அரேபியா அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும்…

மேலும்...

காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்!

காசா(26 டிச 2020): காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தளங்களை நோக்கியே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடத்திய இந்த தாக்குதலில் ஆறு வயது சிறுமியும் 20 வயது இளைஞரும் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் கிழக்குப்…

மேலும்...

சவூதி மக்காவில் உம்ரா கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

மக்கா (26 டிச 2020): புதிய கோவிட் வைரஸின் பயம் தொடரும் நிலையில் , மக்காவில் உள்ள ஹராமில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய கோவிட் வைரஸின் பரவல் அதிகரித்திருப்பதால் சவூதி அரேபியா சர்வதேச விமான சேவை கடல் போக்குவரத்து ஆகியவற்றை ஒருவாரம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஏற்கனவே கோவிட்டின் கட்டுப்பாடு மக்கா ஹரமில் உள்ள நிலையில், புதிய சூழ்நிலைக்கேற்ப மேலும் கட்டுப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி…

மேலும்...

துபாயிலிருந்து புறப்படும் விமான சேவைகள் இடமாற்றம்!

துபாய் (25 டிச 2020): கோவிட் காட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக துபாயிலிருந்து புறப்படும் விமானங்கள் ராஸல் கைமாவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. துபாயிலிருந்து கொச்சி, கோழிக்கோடு மற்றும் மங்களூர் ஆகிய விமானங்களுக்கு இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிளுக்கான விமானங்களும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும். இதன் ஒருபகுதியாக அபுதாபி, துபாய் மற்றும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.- சவூதி சுகாதார அமைச்சர் தகவல்

ரியாத் (23 டிச 2020): சவுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் அலி செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அமைச்சக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தடுப்பூசி எடுத்த அனைத்து உள்நாட்டு , வெளிநாட்டவர்களுக்கு எந்த எதிர் அறிகுறிகளையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார். அமைச்கத்தின் மொபைல் செயலி செஹாட்டி (என் உடல்நலம்) மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யுமாறு அனைவருக்கும் அல்-அப்துல்…

மேலும்...