இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்!

ரியாத் (22 மே 2020): சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிமை மாலை ஷவ்வால் பிறை தென்படாததை அடுத்து சனிக்கிழமை நோன்பு கடைபிடிக்கப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி நாளிதழ் அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையே வளைகுடா நாடுகள் அனைத்தும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...

துபாயில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு!

துபாய் (12 மே 2020): துபாயில் மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஹோட்டல், கடற்கரை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் சில விதிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வெளிப்புற இடங்களிலும் 5 அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நீச்சல்,…

மேலும்...

வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் பிரபல நடிகர்!

திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் பிரபல டிவி சேனலான கைரேலி, இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வளைகுடாவில் வேலையின்றி, பணமின்றி சிக்கித் தவிக்கும் கேரள ஏழை மக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கைரேலி சேனல் முன் வந்துள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டி தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் இந்திய மருத்துவர் மரணம்!

குவைத் (10 மே 2020): குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவர் மரணம் அடைந்துள்ளார். பல் மருத்துவரான வாசுதேவ ராவ் (54) கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் உயிரிழந்துள்ளார். இவர் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். குவைத்தில் ஏற்கனவே எகிப்தை சேர்ந்த தாரிக் ஹுசைன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் வாசுதேவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. Source: Gulf News

மேலும்...

சவூதியிலிருந்து 152 பயணிகளுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது!

ரியாத் (08 மே 2020): சவூதி அரேபியாவிலிருந்து 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டது. கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. நேற்று மாலை இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 354 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தது. இந்நிலையில்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு – துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை!

துபாய் (02 மே 2020): சமூக வலைதளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அதிகரித்தபடி உள்ளன. இது வளைகுடாவில் பணிபுரிந்து வரும் இந்துத்வா கொள்கையளர்களிடம் அதிகம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் இது அதிக கவனம் பெறாத நிலையில் இவ்விவகாரம் தற்போது வளைகுடாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக வளைகுடாவில் பலரும் சட்டப்படியான நடவடிக்கைகளை…

மேலும்...