இந்திய விமானங்களுக்கு தடை – கத்தார் அதிரடி அறிவிப்பு!

கத்தார் (09 மார்ச் 2020): இன்று அதிகாலை முதல், இந்தியாவிலிருந்து கத்தாருக்குப் புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது கத்தர் அரசு. கொரோனா வைரஸ் (COVID-19) க்கு எதிரொலியாக, தோஹாவிற்கு வந்து செல்லும் பல்வேறு நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்து வருகிறது கத்தார். அதன் நீட்சியாக இந்தியா, இத்தாலி, பங்களாதேஷ், சீனா, எகிப்து, ஈரான், இராக், லெபனான், நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான விமானத் தொடர்பினைத்…

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – மக்கா செல்ல உள்நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை!

ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும்…

மேலும்...

ரியாத்தில் நடந்த ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழா!

ரியாத் (29 பிப் 2020): திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி தமிழகத்தின் பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய அளவில் முன்னாள் மாணவர் சங்கங்களை நடத்தி வருகின்றனர். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ரியாத் பிரிவு கடந்த 20 பிப்ரவரி 2020 அன்று ரியாத்தின் நூஃபா அரங்கில் தனது ஆண்டுவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. ஜமாலியன் ரியாத் தலைவர் ஜியாவுதீன் தலைமை தாங்க, முன்னிலையாக துணைத் தலைவர் மாலிக் இப்ராஹிம், செயலாளர்…

மேலும்...

கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைராஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிப்பு!

தோஹா (29 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் நாடு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிலிருந்து வந்த 36 வயது கத்தார் நாட்டை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 43 பேர் கொரோனஆ நோயால் பலியாகியுள்ளனர். மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு!

ஈரான் (28 பிப் 2020): ஈரான் துணை அதிபரும், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருபவருமான மௌசூமே எப்தேகாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் சவூதிக்கு வருகை புரிய தற்காலிக தடை!

மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு. இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய…

மேலும்...

முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் மரணம்!

கெய்ரோ (25 பிப் 2020): எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஹுஸ்னி முபாரக் எகிப்து ராணுவ மருத்துவமனையில் 91வது வயதில் காலமானார். முர்ஸி ஆட்சியில் ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு 2017ல் விடுதலை ஆனார். எகிப்த்தை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் ஹுஸ்னி முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...