சவூதி அரேபியாவில் தமிழர் மரணம்!

அபஹா (14 பிப் 2023): சவூதி அரேபியா அபஹாவில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி அரியலூரைச் சேர்ந்த எட்டு வருடங்களாக சவூதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். விடுமுறை முடிந்து நாட்டிலிருந்து திரும்பி வந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார். அபாஹா அசீர் மருத்துவமனை பிணவறையில் உள்ள சடலம் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி மேலதிக நடைமுறைகள் முடிந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று ஜித்தா துணைத் தூதரக உறுப்பினர்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மழை மற்றும் காற்று வீச வாய்ப்பு!

ரியாத் (12 பிப் 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தபூக், வடக்கு எல்லை, அல்-ஜவ்ஃப், அல்-காசிம், ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை லேசான மழை பெய்யும். ரியாத் மாகாணம் மற்றும் மக்கா, மதீனா, அல்-ஜவ்ஃப், தபூக், வடக்கு எல்லை, ஹைல், அல்-காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளி வரை…

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஜம் ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிப்பு!

ஜித்தா (06 பிப் 2023): சவுதி அரேபியாவில் ஜம்ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஜம்ஜம் விநியோக மையங்களில் இருந்து தினமும் 150 மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படும். மக்கா மதீனா மசூதிக்கு வரும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ள சூழலில் இந்த சோதனை அதிகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு உம்ரா, ஹஜ் யாத்திரையின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாகும். மிக உயர்ந்த சர்வதேச தரத்திலான சிறப்பு ஆய்வகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரப்…

மேலும்...

சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம். இகாமாவை புதுப்பிக்க மூன்று நாட்களுக்கு மேல் தாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பாஸ்போர்ட் துறை கூறியுள்ளது மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகளால் இகாமா கோரப்பட்டாலும், இந்த டிஜிட்டல் இகாமாவைக் காட்டினால் போதும். இகாமாவை புதுப்பித்த பிறகு, புதிய பிரிண்ட்…

மேலும்...

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல சவூதியில் இலவச விசா தொடக்கம்!

ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நான்கு நாள் பயண விசா இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வருபவர்கள் உம்ரா செய்யவும், மதீனாவுக்குச் செல்லவும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லவும் அனுமதிக்கப்படுவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். சவுதி விமான…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதிக்குச் சென்று இஸ்லாமிய உடையில் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட…

மேலும்...