Gunasekaran News 18 Tamil

நியூஸ் 18 ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் குணசேகரன்!

சென்னை (31ஜூலை 2020):கடந்த சில நாட்களாக நியூஸ் 18 ற்றும் சங்க பரிவார யூ ட்யூபர்களுக்கு இடையில் நடந்து வந்த பனிப்போரின் எதிரொலியாக அந்த சேனலில் நிலவி வந்த பல குழப்பங்களினால், அதற்கு எதிராக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகளும், அந்த சேனலை அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக பலரும் அறிவித்து வந்தனர்.ஒரு சில கட்சிகள் அதன் விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அறிவித்தன. அதன் முத்தாய்ப்பாக தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளரும், நியூஸ் 18 தமிழ் சேனல் ஆசிரியருமான, தற்போது…

மேலும்...

எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின்!

சென்னை (31 ஜுலை 2020): “அதிமுக எம்.ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும்…

மேலும்...

திப்பு சுல்தானை உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிடமுடியுமா? – ராஜ்கிரண் பளார் கேள்வி!

சென்னை (29 ஜூலை 2020): திப்பு சுல்த்தான் குறித்த பாடங்களை பாட புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம் உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிட முடியுமா? என்று நடிகர் ராஜ்கிரண் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து தீரன் திப்பு சுல்த்தான் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “திப்பு சுல்தானை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடலாம்… இந்திய சரித்திரத்திலிருந்து நீக்கிவிட முடியுமா…?…

மேலும்...

கொரோனா பாசிட்டிவ்: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி!

தஞ்சாவூர் (29 ஜுலை 2020): கொரோனா பாசிட்டிவ் என உறுதியானாலும், அவரவர் வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று…

மேலும்...

போலி வீடியோக்கள் – நீதிமன்ற கிடுக்கிப் பிடியில் மாரிதாஸ்!

சென்னை (29 ஜூலை 2020): சமூக வலைதளங்களில் வெளியிட்ட போலி வீடியோக்களை நீக்க கூறி மாரிதாஸுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்த நிலையில், ₹ 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க…

மேலும்...

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் – காரணம் ஏன் தெரியுமா?

சென்னை (29 ஜூலை 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை…

மேலும்...
Sanskrit-Hebrew

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-6

முதலில் சியோனிச சித்தாந்தத்திற்கும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். சியோனிசம் : சியோனிசம்  என்ற சித்தாந்தம் ”யூத தேசிய இயக்கம்” என்ற அர்த்தத்தைத் தரும். தேசமே இல்லாமல், பல்வேறு தேசங்களில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்கமாகும். ஆக, சியோனிசத்தின் அடிப்படை நோக்கமே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும். இந்துத்துவம் :  இந்துத்துவம் என்ற சித்தாந்தம் இந்துக்களுக்கான (பிராமணியர்களுக்கான) அகண்ட…

மேலும்...

அரசு மருத்துவமனை குறித்து அதிர வைக்கும் தகவல் – மருத்துவரின் பரபரப்பு இறுதி நிமிடங்கள்!

இராஜபாளையம் (28 ஜூலை 2020): கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால், கடந்த 10-ம் தேதி, கொரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

மேலும்...

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு கொரோனா பாதிப்பா?

புதுச்சேரி (28 ஜூலை 2020): புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி மற்றும் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது. இதன்பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் மரத்தடியில் நடைபெற்றது….

மேலும்...

மீண்டும் நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு!-ஏராளமான மாணவர்கள் மறுபடியும் ஆப்சென்ட்!

சென்னை (28 ஜூலை 2020): 327 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்று பிளஸ் டூ மறு பொதுத்தேர்வு நடைபெற்றது. பிளஸ்-டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள்(மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை)…

மேலும்...