அடிக்குது புயல் – வெளுக்குது மழை!

சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம்,…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

அதிராம்பட்டினம் (09 டிச 2022): அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் வியாழன் அன்று திடீரென கடல் உள் வாங்கியதால் கரையோரம் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. கடந்த கஜா புயலின்போதும் இதேபோல கடல் உள் வாங்கியது, மேலும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தற்போது மழை புயல் காலமாதலால் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியுள்ளதால் மீண்டும்…

மேலும்...

மாண்டஸ் புயலால் சென்னை மெரினா மாற்றுத் திறனாளிகள் பாலம் சேதம்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை…

மேலும்...

தீவிரமடையும் மாண்டஸ் புயல்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது…

மேலும்...

மாண்டஸ் புயல் – 251 நிவாரண மையங்கள் தயார்: தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சாவூர் (08 டிச 2022): தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை…

மேலும்...

தீவிரமாக மாறும் மாண்டஸ் புயல்!

சென்னை (08 டிச 2022): நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை 0830 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலின் பயணித்த சொகுசு ரெயில் பெட்டி – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை (08 டிச 2022):: தென்காசி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சொகுசுகள் நிறைந்த ரயில் பெட்டி கவனம் ஈர்த்துள்ளது. தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...

உருவானது மாண்டஸ் புயல்!

சென்னை (08 டிச 2022): வங்கக்கடலில் உருவானது மாண்டஸ் புயல். இது சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. வங்க கடலில் உருவாக உள்ள மாண்டஸ் புயல் (Cyclone Mandous) தமிழத்தில் இன்று முதல் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின்…

மேலும்...