திமுகவில் பல திருப்பங்கள் நடக்கும் – விலக்கப்பட்ட வி.பி துரைசாமி பரபரப்பு பேட்டி!

சென்னை (22 மே 2020): திமுகவிலிருந்து இன்னும் பலர் விரைவில் வெளியேறுவார்கள் என்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சீட் கொடுக்காததால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், விபி துரை சாமி, மு.க ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை பொது வெளியில் முன்வைத்தார். இதனை அடுத்து, கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட துரை சாமி, சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்….

மேலும்...

மேற்கு வங்கத்தை உலுக்கிய உம்பன் புயல் – 72 பேர் பலி!

கொல்கத்தா (22 மே 2020): மேற்கு வங்கத்தைல் உம்பல் புயல் பாதிப்பால் 72 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான உம்பன், நேற்று மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது. அப்போது கொல்கத்தாவில் மணிக்கு 190 கிலோ மீட்டர் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்ததது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன….

மேலும்...

தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதி!

சென்னை (22 மே 2020): தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நிபந்தனையுடன் ஆட்டோக்‍களை இயக்‍க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, கடந்த 2 மாதங்களுக்‍கும் மேலாக தமிழகத்தில் பிற வாகனங்களுடன் ஆட்டோக்‍களுக்‍கும் தடை விதிக்‍கப்பட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனவே, அவர்களது நிலையைக்‍ கருத்தில் கொண்டு, ஆட்டோக்‍களை இயக்‍க அனுமதி அளிக்‍க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்….

மேலும்...

பாஜகவுடன் கூட்டு – திமுக முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்!

சென்னை (21 மே 2020): திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துரைசாமி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்...

தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் . அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும். இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ்…

மேலும்...

டெல்லியிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை!

திருநெல்வேலி (21 மே 2020): டெல்லியிலிருந்து தமிழகம் வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் நெல்லையில் அவர்கள் சொந்த வீடுக:ளுக்குச் சென்றனர். தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாத்தினர் நாடுதழுவிய ஊரடங்கால் சொந்த மாநிலம் வரமுடியாமல் தவித்தனர். அவர்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசின் முயற்சியில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நெல்லியில் நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று இல்லை…

மேலும்...

பாஜக பெண்களை மதிக்கும் கட்சி – தமிழக பாஜக தலைவர் கருத்து!

சென்னை (21 மெ 2020): பாஜக பெண்களை மதிக்கும் கட்சி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை 35 லட்சம் மோடி கிட்வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 1 கோடி பேருக்கு வழங்க தயார் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 21…

மேலும்...

அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

சென்னை (20 மே 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டலின், “கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி…

மேலும்...

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (20 மே 2020): தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறக்‍கப்பட்டவுடன் தேர்வை நடத்தப்போவதாக அறிவித்திருக்‍கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பள்ளிகளுக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு…

மேலும்...

ராகுல் காந்தி மீது பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவில் (20 மே 2020): ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்படுகிறார் என்று முன்னாள் மத்திய இணை அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “வெள்ளாடிச்சிவிளை பகுதி தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். பள்ளிகள்…

மேலும்...