துப்பாக்கி ஏந்தும் கையில் மதுபாட்டில்கள் – அரசு வாகனத்தில் படு அமர்க்களம்!

ராணிப்பேட்டை (20 மே 2020): ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இன்று காலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு வந்தது. மதுப் பிரியர்கள் காலையிலே வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக்கொண்டு தேவையான சரக்குகளை வாங்கி கைகளிலும் இடுப்பிலும் பாக்கெட்களில் கோணிப்பை போன்றவற்றில் வாங்கி மறைத்து எடுத்துச் சென்றனர் தக்கோலம் டாஸ்மாக் கடையில் போதுமான மதுபானங்கள் இருந்தமையால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர் இந்நிலையில் அப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை…

மேலும்...

வழக்கத்திற்கு மாறாக ரம்ஜான் நோன்பில் திடீர் முடிவெடுத்த திருமாவளவன்!

சென்னை (20 மே 2020): ரம்ஜான் நோன்பில் வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் மூன்று நோன்பை மட்டுமே கடை பிடிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் 5 நோன்புகளை பிடிப்பார். ஆனால் இவ்வருடம் சில தவிர்கமுடியாத காரணங்களால் 3 நோன்பை மட்டுமே பிடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் “16ஆவதுஆண்டாக நோன்பு நாளை தொடங்குகிறேன். வழக்கமாக 5 நாட்கள்…

மேலும்...

நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு!

சென்னை (19 மே 2020): பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர்…

மேலும்...

இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது…

மேலும்...

பாஜகவின் ஆபாச அணுகுமுறை எதிரொலி – கரூர் எம்பி ஜோதிமணி அதிரடி முடிவு!

சென்னை (19 மே 2020): தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக கரு நாகராஜன் தரக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக பாஜக கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக…

மேலும்...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு – புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை (19 மே 2020): தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு…

மேலும்...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்…

மேலும்...

தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப ரெயில் கட்டணம் செலுத்திய எம்பி ரவீந்திரநாத்துக்கு நன்றி: ஜவாஹிருல்லா!

சென்னை (18 மே 2020): டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப உதவிய எம்பி ரவீந்திரராத் உள்ளிட்ட அனைவருக்கும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் முழு முடக்கத்தில் பயணிக்க இயலாத நிலையில் இருந்த தமிழக தப்லீக் சகோதரர்களும் சகோதரிகளும் தமிழகம் திரும்பினர். நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் தாம்பரம் ரயில்…

மேலும்...

கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி!

கும்பகோணம் (17 மே 2020): கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கயித்துக்காரத்தெருவை சேர்ந்த அனைவரும் வீடு திரும்பியதால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்கள் முடிவுற்று, புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட…

மேலும்...

மதுபான பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் மாலை 5 மணி வரை இருந்த நிலையில், தற்போது இரவு 7 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி…

மேலும்...