தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை(17 மே 2020): தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து…

மேலும்...

டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் சென்னை புறப்பாடு!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும்…

மேலும்...

வெளிநாட்டு விமானங்களுக்கு சென்னைக்கு பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு!

சென்னை (16 மே 2020): “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் தமிழகம் வரும் விமானங்கள், சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தமிழகம் வரவிருப்பதால் இனி, சென்னைக்குப் பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 11 விமானங்கள்…

மேலும்...

புறக்கணிக்கப்படும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் – திருமாவளவன் பதில்!

சென்னை (15 மே 2020): வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு ‘வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம்’ அமைக்க அரசிடம் வலியுறுத்தப்படும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். ஜும் செயலி வழியாக பல்வேறு நாட்டினை சேர்ந்த தமிழ்மக்கள் திருமாவளவனுடன் உரையாற்றினார்கள். அதில் குறிப்பாக, கொரோனா காலத்தில் வேலை இழந்து ஊருக்கு செல்ல எத்தனித்துள்ள தமிழர்களை அழைத்துக் கொள்வதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதையும் மற்ற மாநிலங்கள்…

மேலும்...

டாஸ்மாக் – செம்மையாக ஏமாந்த குடிகாரர்கள்!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று குடிகாரர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று…

மேலும்...

டாஸ்மாக்கை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – கமல் அதிரடி கருத்து!

சென்னை (15 மே 2020): டாஸ்மாக்கை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் கமல் கருத்து தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச…

மேலும்...

டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் – உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (15 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தஹி வாதிட்டார். ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை (15 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாணியது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண…

மேலும்...

திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் பாய்ச்சல்!

சென்னை (14 மே 2020): திமுக எம்பிக்களின் பேச்சு தம்மை சார்ந்தவர்களை புண்படுத்தியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைத்து – அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துதிமுக சார்பில் மனுக்களை அளிக்க தலைமைச் செயலாளர் அவர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து பேசியபோது, தலைமை செயலர் வித்தியாசமாக நடந்து கொண்டதாக திமுக எம்பிக்கள் குற்றம் சட்டியுள்ளனர். அதில், “நாங்கள்…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த புற்று நோயாளிகள் குணமடைந்தனர்!

சென்னை (14 மே 2020): சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் புற்று நோய் பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். அதில் குறிப்பாக வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோய் தீவிர தன்மையடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய்…

மேலும்...