வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (05 டிச 2022): அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி…

மேலும்...

பாஜகவில் காயத்ரி ரகுராம் பொறுப்புக்கு இசையமைப்பாளர் நியமனம்!

சென்னை (04 டிச 2022): தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். இதையடுத்து வர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறி பாஜகவில் இருந்து…

மேலும்...

சிரமத்தை தவிற்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதளம்!

சென்னை (04 டிச 2022): மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை…

மேலும்...

திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!

சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 40 தொகுதிகளையும் கைபற்ற வேண்டும் என்று திமுக முனைப்போடு செயலாற்ற தொடங்கிவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த இலக்கை நோக்கி திமுக நகர தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன்…

மேலும்...

தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களுடன் தலைமையாசிரியை கழிவறையை சுத்தம் செய்துள்ளார். மாணவி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் தலைமை ஆசிரியை கீதா ராணி தலைமறைவாக உள்ளார். புகாரின்படி, கழிவறையை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை…

மேலும்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் மாணவி ஒருவருக்கு கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் மாணவிக்கு செல்போன் மூலமாக ஜார்ஜ் ஆபிரகாம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தனது செல்போனிற்கு…

மேலும்...

சமூக பொருளாதார அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

சென்னை (03 டிச 2022): சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள லயோலா கல்லூரியின் லிபா வளாகத்தில் வர்த்தக மேலாண்மை துறை சார்பில் திராவிட மாடல் வர்த்தக முன்னேற்றம் மற்றும் மனித மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “இடதுசாரி, வலதுசாரி நாடுகளுக்கு இடையிலான போட்டியாக உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல். சாதி, மதம், இனம், பால் வேறுபாடு இன்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்…

மேலும்...

ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்…

மேலும்...

பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கும்பகோணம் (02 டிச 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த மாதம் 21ம் தேதி காலை சக்கரபாணி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகச் சொந்த வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில்…

மேலும்...

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

சென்னை(01 டிச 2022): விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிமாறன் மீது விசிக தலைவர் திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம்(தெற்கு) இலத்தூர் வடக்குஒன்றியச் செயலாளர் திரு.மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்றுமாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...