கோவை ஈஷா மையத்தின் உண்மை முகம் – பாதிக்கப் பட்ட பெண்ணின் தாய் பகீர் தகவல்(வீடியோ)

கோவை ஈஷா மைய‌ம் குறித்து அவ்வப்போது பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போதே பலர் அந்த மைய‌ம் குறித்தும் சத்குருவின் மோசடிகளை வெளியே கூறியபோதும் சத்குரு அவரது செல்வாக்கை பயன்படுத்தி யோகா மையம் குறித்த எந்த மோசடி தகவல்களும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். மக்களும் மறந்து விட்டனர். ஆனால் இவர்கள் போன்ற மோசடி பேர்வழிகளுக்கு ஆளும் அரசின் ஆதரவு…

மேலும்...

அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் – சீமான் பரபரப்பு அறிக்கை!

சென்னை (13 ஏப் 2020): கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பேரிடர் காலத்தில் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் வழியின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவும்பொருட்டு அர்ப்பணிப்போடு களமிறங்கி தொண்டாற்றும் தன்னார்வலர்களின் பணிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது முறையல்ல! மழை, வெள்ளம், புயல் தொடங்கி கொரோனோ…

மேலும்...

சித்திரை திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை!

நெல்லை (13 ஏப் 2020): சித்திரை திருநாளை முன்னிட்டு நாளை நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் எனினும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடைகிறது. இருப்பினும் மீண்டும் நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்…

மேலும்...

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (13 ஏப் 2020): தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை ஏப். 15 காலை வரை…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த மருத்துவர் உயிரிழப்பு – தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

சென்னை (13 ஏப் 2020): சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூர் மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு மயானத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தன்னார்வலர்கள் உதவுவதற்கு தடையில்லை – சென்னை காவல் ஆணையர் தகவல்!

சென்னை (13 ஏப் 2020): தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்ய தடை விதிக்கப்படவில்லை ஆனால் வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பலமுனையிலிருந்தும் எதிர்ப்பு வரவே, இதுகுறித்து சென்னை காவல் ஆணையர்…

மேலும்...

இன்று திடீரென இணையங்களில் ட்ரெண்ட் ஆகும் சீமான்!

சென்னை (13 ஏப் 2020): தமிழகம் சார்பாக ஆர்டர் செய்திருந்த ரேபிட் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கைபற்றியது குறித்து வெளியான செய்திக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ரேபிட் சோதனை கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது. அந்த ரேபிட் சோதனை கருவிகள்…

மேலும்...

தொடர் வேலையால் அசதியில் குப்பை வண்டியிலேயே உறங்கிய துப்புரவு தொழிலாளி!

நாகர்கோவில் (13 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் இரவு பகலாக உழைக்கும் பெண் துப்புரவு தொழிலாளர் ஒருவர் குப்பை வண்டியிலையே உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுடன் இணைந்து மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் போன்றோரும்…

மேலும்...

தனியார் ஆய்வகங்களில் இலவச கொரோனா பரிசோதனை – பீலா ராஜேஷ் அறிவிப்பு!

சென்னை (13 ஏப் 2020): தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்களை அரசே ஏற்கும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 14 அரசு மருத்துவமனைகளுக்கும், 9 தனியாா் மருத்துவமனைகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியாா் ஆய்வகங்களில்…

மேலும்...

தமிழக அரசின் உத்தரவு பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும் – ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தன்னார்வலர்கள் உணவு அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏழை கூலித் தொழிலாளிகளின் பட்டினிச் சாவுக்கு வழி வகுக்கும்,” என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல்…

மேலும்...