கொரோனா வைரசும் திமுகவும் – பகீர் கிளப்பும் அமைச்சர்!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட…

மேலும்...

தவறே செய்யாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்திப் படுத்த? -நவாஸ் கனி கேள்வி!

சென்னை (12 ஏப் 2020): இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, என்று இ.யூ முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. ஊரடங்கு உத்தரவு வருவதற்கு…

மேலும்...

விஷக்கிருமிகளோடு விஷப்பிரச்சார மீடியாக்கள் – காதர் மொகிதீன் கடும் கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): விஷக்கிருமி பரவலுக்கு எதிராகப் போராடும் இத்தருணத்தில் விஷக் கருத்துக்களை பரப்பி விவாதித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “உலகத்தையே பேரிடராக அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டில் மத்திய…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் மரணம் – பலி எண்ணிக்கை11 ஆக உயர்வு!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45…

மேலும்...

தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு ஆலோசனை!

சென்னை (11 ஏப் 2020): ஊரடங்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழக அரசு சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி  எம்.எல்.ஏ  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என…

மேலும்...

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டிய தன்னார்வ அமைப்பு!

கரூர் (11 ஏப் 2020): லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே காய்கறிகளை இலவசமாக கொடுத்து வந்த வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் தற்போது ஆதரவற்ற 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, 144 ஊரடங்கு தடை உத்திரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர…

மேலும்...

புறக்கணிக்கப் பட்ட தஞ்சை மருத்துவக் கல்லூரி!

தஞ்சாவூர் (11 ஏப் 2020): தமிழகத்தின் இரண்டாவது பெரிய மருத்துவக் கல்லூரியான தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கூடம் இல்லாதது துரதிர்ஷ்டம் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர். கொரோனா வைரஸ் உலக அளவிலும், இந்தியாவிலும் பெரிய அளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வுக்கூடம் இல்லாமல் அப்பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய அவர்களின் ரத்தம் மற்றும் உமிழ் நீர் மாதிரிகள் 108…

மேலும்...

அப்போது இல்லை என்றார்கள் இப்போது இருக்கிறது என்கிறார்கள் – கொரோனா சோதனை சொதப்பல்!

சென்னை (11 ஏப் 2020): சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள கடையில் பணியாற்றிய மூவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வீண் விவாதம் வேண்டாம் – மன்சூர் காஷிபி கோரிக்கை!

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிக்கப் பட்டவர்களாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் வீண் விவாதம் வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினரின் எண்ணிக்கை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பியுள்ளனர். தமிழக அரசு தெளிவாகவே விளக்கம் அளித்து வருகிறது. இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை. தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினருக்கு கொரோனா பாஸிடிவ் ஆனால் அறிகுறிகள் இல்லை – குழப்பத்தில் மருத்துவத்துறை!

சென்னை (10 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர் சிலருக்கு கொரோனா பாஸிட்டிவ் என கூறப்பட்டபோதும் யாருக்கும் அறிகுறிகள் இல்லதது மருத்துவத்துறையினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் அதிகமானோர் தப்லீக் ஜமாஅத்தினரே என்று தமிழக சுகாதாரத்துறை தினமும் அளித்து வரும் தகவல்கள் படி தெரிய வருகிறது. அதேவேளை அவர்கள் யாருக்கும் எந்தவித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதுதான் மிகபெரிய கேள்விக்குறி. இது இப்படியிருக்க,…

மேலும்...