வாசம் பிடித்த வாசன் – மோசம் போன தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2020): மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜி.கே.வாசன் அறிவிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மேல்சபை எம்.பி. பதவிக்கான வாய்ப்பை வழங்கி இன்று அ.தி.மு.க. சார்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தே.மு.தி.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தே.மு.தி.க., மேல்சபை எம்.பி. பதவியை கேட்டிருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போதே அதற்கு உறுதியும் அளிக்கப்பட்டு இருந்தது. அனால் அ.தி.மு.க. தலைமை திடீரென இவ்வாறு…

மேலும்...

திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...

மாநிலங்களவை தேர்தல் – போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை (09 மார்ச் 2020): நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை…

மேலும்...

தமிழக அரசின் ரூ. 4,200 கோடி இமாலய ஊழல் – தொழிலாளர் சங்கம் கண்டனம்!

சென்னை (09 மார்ச் 2020): தமிழக அரசின் கிராமப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊழலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாய தொழிலாளர் சங்கம் வரும் 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்க வும், குறிப்பாக வறுமையிலிருந்து மக்களை மீட்கவும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே உள்ள இடை வெளியை குறைக்கவும் கொண்டு வரப்பட்ட சட்டம் மகாத்மா காந்தி தேசிய…

மேலும்...

தஞ்சை அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்பு!

தஞ்சவூர் (09 மார்ச் 2020): தஞ்சாவூர் அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெரு வில் 600 ஆண்டு பழமையான ஆதீஸ்வரர் என்கிற ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 19 ஆம் தேதி பின்புறக் கதவு உடைக்கப்பட்டு ஒன்றரை யடி உயர ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வ ரர் சிலை உள்ளிட்ட சிலைகள் திருடு போயின. இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர், கோயில் சி.சி.டி.வி., கேமரா வில் பதிவான…

மேலும்...

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பதவி யாருக்கு?

சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார். அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த…

மேலும்...

ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டில்…

மேலும்...

பட்டப்படிப்பு பயின்றாலும் துப்புரவு பணி செய்வதில் மகிழ்ச்சி – நெகிழ வைக்கும் மாணவி!

கோவை (07 மார்ச் 2020): கோவையில் எம்.எஸ்.ஸி பயின்று வரும் மாணவி துப்புரவு பணியாளராக தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்….

மேலும்...

பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம்…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் க. அன்பழகன் இன்று (6-3-2020) நலக்குறைவால் காலமானார். க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அது பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மரணமடந்தார். அவருக்கு வயது 98.

மேலும்...