துரைமுருகன் ஆலைக்கு சீல்!

காட்பாடி (02 மார்ச் 2020): காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மேலும்...

ஸ்டாலினுக்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம்!

சென்னை (02 மார்ச் 2020): ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்காததால் திமுக தலைவர் ஸ்டாலின் மீது முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.யாக திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த முறையே ராஜ்யசபா எம்.பி.யாவார் என எதிர்பார்க்கப்பட்ட என்.ஆர். இளங்கோவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சரான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜை…

மேலும்...

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி – வீடியோ!

கரூர் (02 மார்ச் 2020): கரூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பெரிய மாடு,…

மேலும்...

எம்பி பதவி தரவில்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

சென்னை (01 மார்ச் 2020): திமுக, அதிமுக இரு கட்சிகளிலும் டெல்லி மேல்சபையில் நாடார் சமூகத்திற்கு இடம் அளிக்க வேண்டும் என்று தெஷ்ணமாற நாடார் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந்தேதி நடக்கிறது. ஆறு இடங்களுக்கு 6-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் தேர்தல் நடக்கும். இல்லையேல் போட்டியின்றி 6 பேர் அறிவிக்கப்பட்டு விடுவார்கள். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற மார்ச் 6-ந்தேதி முதல் 13-ஆம் தேதி வரை…

மேலும்...

தமிழக முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு!

சென்னை (01 மார்ச் 2020): தமிழ்நாடு முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் வலுத்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் ரஜினி, வெளியில் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி வருகிறார். ஆனால் தமிழகம் வரும் பாஜக தலைவர்கல் நிகழ்ச்சிகளில் எல்லாவற்றிலும் ரஜினி கலந்து கொள்வார். இதுவல்லாமல் பாஜக அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து கருத்து தெரிவித்து வருபவர் ரஜினி. குறிப்பாக சிஏஏவுக்கும்…

மேலும்...

முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

மாதவரம் ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

மாதவரம் (29 பிப் 2020): மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் வெளியாகக் கூடிய புகை மற்றும் வெப்பத்தால் தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர வேறு பொதுமக்களும் எதிர்பாராமல் பாதிக்கப்படும் வாய்ப்பு…

மேலும்...

பொய் சொல்லவும் ஒரு திறன் வேண்டும் – அமித் ஷாவை விளாசிய விசிக எம்பி ரவிகுமார்!

சென்னை (29 பிப் 2020): “குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பச்சை பொய்” என்று விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை…

மேலும்...

அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

நடிகர் ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை கடிதம்!

சென்னை (28 பிப் 2020): நடிகர் ரஜினியை சந்தித்து பேச ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக அவரை சந்திக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி, சிஏஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துகள் அதிருப்தி அளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில்…

மேலும்...