பொதுமக்களுக்கு அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (08 நவ 2022): பாதசாரிகள் மற்றும் ஜாகிங் செய்ய ஒதுக்கப்பட்ட பாதையில் சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு எதிராக அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் கவனக்குறைவாக ஓட்டுவதால் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதாக பாதசாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். பாதசாரிகளுடன் சேர்ந்து மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தீவிரமாக இருக்கும் – வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை (08 நவ 2022): தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து…

மேலும்...

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு!

சிம்லா (08 நவ 2022): சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் 26 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், இளைஞர்…

மேலும்...

சென்னைக்கு வந்த அதிவேக வந்தே பாரத் ரெயில்!

சென்னை (07 நவ 2022): அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் தன்னுடைய 5வது பயணத்தை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் அடுத்த கட்ட பயணமாக 5வது வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் இயக்க, சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதன் இறுதி கட்ட ஒத்திகை பயணம் இன்று காலை தொடங்கியது. சென்னை…

மேலும்...

திமுக ஆதரவில் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது. அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம்….

மேலும்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை (05 நவ 2022): வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக…

மேலும்...
RSS

ஆர் .எஸ்.எஸ் பேரணி – மேல் முறையீடு செய்ய முடிவு!

சென்னை (05 நவ 2022): நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

சென்னையில் அதிர்ச்சி – பிரிட்ஜ் வெடித்து மூவர் உயிரிழப்பு!

சென்னை (04 நவ 2022): சென்னை ஊரப்பாக்கத்திலுள்ள கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவிலுள்ள பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில், கிரிஜா என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. நேற்று துபாயிலிருந்து சென்னை வந்த கிரிஜா, பிருந்தாவன் அபார்ட்மெண்ட்டில் உள்ள தனது வீட்டில் ராதா, ராஜா என்ற தனது 2 உறவினர்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீட்டிலிருந்த ரெஃப்ரிஜரேட்டரின் கம்ப்ரசர் வெடித்துள்ளது. இதனால் எழுந்த புகையில், மூச்சு விட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா,…

மேலும்...

கோவையில் கோவிலுக்கு சென்ற முஸ்லிம் ஜமாத்தினர்!

கோவை (04 நவ 2022): கோயம்புத்தூரில் முஸ்லிம் ஜமாத்தினர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். கோவை மாவட்டம் உக்டத்தில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோயிலில் மத நல்லிணக்க சந்திப்பு நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இனையத்துல்லா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சங்கமேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்டோரை சந்தித்தனர்….

மேலும்...

ஆவின் பால் விலை உயர்வு!

சென்னை (04 நவ 2022): கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால்…

மேலும்...