சி.ப.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் – முதல்வர் திறந்து வைத்தார்!

திருச்செந்தூர் (22 பிப் 2020): திருச்செந்தூரில் பத்திரிக்கை அதிபர் சி.ப. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மணி மண்டப திறப்பு விழா இன்று தொடங்கியது. அப்போது, பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை ரிப்பன்…

மேலும்...

முரசொலி பத்திரிகை நிலம் மீது அவதூறு – டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

சென்னை (22 பிப் 2020): முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கில் வழக்கில், வரும் மார்ச் 20-ஆம் தேதி பாமக…

மேலும்...

ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் நாட்டுக்கு தேவை – வெங்கயா நாயுடு!

கோவை (22 பிப் 2020): நாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் போல ஆன்மிக குருக்கள் பலா் தேவைப்படுவதாக குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு மகா சிவராத்திரி விழா இத்தனை பிரமாண்டமாக நடப்பதைப் பாா்க்கும்போது வியப்பாக உள்ளது. அமைதியையும், சகோதரத்துவத்தையும் பரப்பி வரும் யோக மைய நிறுவனா் சத்குருவுக்கு பாராட்டுகள்….

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பதாகைகளுடன் புதுமண தம்பதிகள்!

கோவை (21 பிப் 2021): கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் தமிழகத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் நேற்று (20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் – ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள்…

மேலும்...

பதற வைக்கும் விலை உயர்வு!

சென்னை (21 பிப் 2020): தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அவ்வப்போது உச்சத்தை தொடுவதும், பின்பு சற்று குறைவதுமாக இருக்கும். அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக் கிழமையான இன்று(பிப்.21) சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 2000 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது….

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் – தொடரும் 8 வது நாள் போராட்டம் -வீடியோ

சென்னை (21 பிப் 2020): சென்னை ஷஹீன் பாக் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியால் பலர்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – கேரள முதல்வர் சென்னை வருகை!

சென்னை (21 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பங்கேற்கிறார். நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது….

மேலும்...

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் – மசோதா தாக்கல்!

சென்னை (20 பிப் 2020): காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் அதன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். பிற்பகல் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு…

மேலும்...

ஷஹீன் பாக் மாடல் தொடர் போராட்டம் கோவையிலும் தொடங்கியது – வீடியோ!

கோவை (20 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் நாடெங்கும் பரவியுள்ள நிலையில் கோவையிலும் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லியைப் போன்று சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்று தொடர் போராட்டத்தில்…

மேலும்...

திருப்பூர் அருகே பயங்கரம்- பேருந்து கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி!

சேலம் (20 பிப் 2020): அவிநாசிதேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும்- கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். அவிநாசி காவல்…

மேலும்...