சென்னை சட்டமன்ற முற்றுகை நேரலை (LIVE VIDEO)

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சென்னை – சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலிருந்து புறப்பட்டு பேரணியாகச் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன் நேரலைக் காட்சிகள்

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் 6 வது நாள் போராட்டம்!

சென்னை (19 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து 6 வது நாளாக தொடர்கிறது. டெல்லி ஷஹீன் பாக் மாடலாக சென்னையிலும் 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை…

மேலும்...

திருச்சி CAA எதிர்ப்பு பேரணிக்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை – திருமாவளவன் அறிவிப்பு!

திருச்சி (19 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்படுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், இப்பேரணியில் பங்கேற்க தோழமை கட்சிகளுக்கோ, இஸ்லாமிய அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் முழுமையக விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் ஓபிஎஸ் என்ன மாடுபிடி வீரரா? – துரைமுருகனின் காமெடி கலாட்டா!

சென்னை (19 பிப் 2020): விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார்.

மேலும்...

சிவானந்த குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் மரணம்!

சென்னை (18 பிப் 2020): சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் செவாய் அன்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பல ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளித்த அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் – இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

சென்னை (18 பிப் 2020): திட்டமிட்டபடி சிஏஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நாளை (பிப் 19) நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. ஆனால். இந்த போராட்டங்களுக்கு…

மேலும்...

வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

அறந்தாங்கி (18 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்த்து அறந்தங்கி மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்...

சிஏஏ போராட்டம் – சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

சென்னை (18 பிப் 2020): நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறி பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 11 வரை போராட்டத்திற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மத்திய,…

மேலும்...

அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக உலா வரும் போலி செய்தி!

சென்னை (18 பிப் 2020): அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு போலி செய்தி ஒன்று உலா வருகிறது. குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயா பிளஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி போல் போட்டோ ஷாப் செய்தி ஒன்று உலா வருகிறது. “அதில் குடியுரிமை சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. திமுக தவறான பிரச்சாரம் செய்கிறது” என்பதாக அந்த செய்தி உள்ளது. ஆனால் ஜெயா பிளஸ் அந்த செய்தியை மறுத்துள்ளது. மேலும் இது…

மேலும்...

சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து தீவிரமடையும் சென்னை ஷஹீன் பாக் போராட்டம் – வீடியோ!

சென்னை(18 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டசபையில் சபாநாயகர் அறிவித்ததை அடுத்து சென்னை ஷஹீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை (சென்னை ஷஹீன் பாக்) தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என மத பேதமின்றி பலரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்…

மேலும்...