விஜய் வீட்டு சோதனையில் சிக்கியது எவ்வளவு? – வருமான வரித்துறை விளக்கம்!

சென்னை (06 பிப் 2020): விஜய்யின் வீடு, ஏஜிஎஸ் குழும சொத்துக்களில் ரெய்டு நடந்து வருவது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிகில் விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், விஜய்யின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரின் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோரின்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறந்ததுண்டா? -ரஜினிக்கு சீமான் சரமாரி கேள்வி!

சென்னை (06 பிப் 2020): இந்திய இஸ்லாமியர்களுக்காக் இதுவரை வாய் திறந்ததுண்டா? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை, போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ- என்ஆர்சி – என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், ‘முஸ்லிம்களுக்கு இந்த சிஏஏ சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. அது தவறு. முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்’ என்று பேசினார். இதைத்…

மேலும்...

மாணவர்களுக்கு இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டீர்களே மிஸ்டர் ரஜினி?

சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும்…

மேலும்...

சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – வீடியோ!

நீலகிரி (06 பிப் 2020): தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவன் ஒருவரை அழைத்து அவரது செருப்பை கழட்ட சொன்ன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு அமைச்சர்…

மேலும்...

முஸ்லிம் மத குருமார்கள் யார்? – ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை சரமாரி பதில்!

சென்னை (06 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி முஸ்லிம் மதகுருமார்களையும் சாடியிருந்த வேளையில் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் சரமாரி பதில் அளித்துள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். இந்நிலயில் தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்…

மேலும்...

ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து வெளியிட தயாரா? – ஜவாஹிருல்லா சவால்!

சென்னை (06 பிப் 2020): நடிகர் ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து சான்றிதழ் தர தயாரா? என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான…

மேலும்...

என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்,…

மேலும்...

ரஜினியின் முகமூடி அம்பலப்பட்டது – அழகிரி தாக்கு!

சென்னை (05 பிப் 2020): ரஜினியின் உண்மை முகம் இன்று அம்பலப்பட்டு விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தங்களது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல,…

மேலும்...

இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் – ரஜினி பரபரப்பு பேட்டி!

சென்னை (05 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். என்பிஆர் அவசியம் தேவை. அப்போதுதான் வெளிநாட்டவர்களை அடையாளம் காண முடியும். இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாக நான் நிற்பேன். முஸ்லிம்கள்…

மேலும்...

தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தஞ்சாவூர் (05 பிப் 2020): தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. இன்று புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகியவையும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் உள்…

மேலும்...