சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

சென்னை (04 பிப் 2020): சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து…

மேலும்...

ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

சென்னை (04 பிப் 2020): ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே வாங்கலாம் என்ற சட்ட இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

சென்னை (04 பிப் 2020): 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும். குழந்தை பருவத்திலேயே தேர்வு…

மேலும்...

விழுப்புரத்தில் பயங்கரம் – பெட்ரோல் பங்க் மேலாளர் குண்டு வீசி கொலை!

விழுப்புரம் (04 பிப் 2020): விழுப்புரத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கம்பன் நகரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) மேலாளராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமையும் பணியில் இருந்தார். பகல் 11 மணியளவில் காரில் வந்த 4 மர்ம நபர்களும், பைக்கில் வந்த 2 மர்ம நபர்களும் பெட்ரோல் பங்கில் டீசல் பிடிப்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல்…

மேலும்...

தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...

திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – அன்பழகன் அதிரடி நடவடிக்கை!

சென்னை (04 பிப் 2020): திமுகவின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாள அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்படுகிறார். தேர்தல் பணிக் குழுச் செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்டப்…

மேலும்...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென…

மேலும்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – மேலும் நான்கு பேர் கைது!

சென்னை (03 பிப் 2020): டிஎன்பிஎஸ்சி குரூப் – 2ஏ முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள ச்யில், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்ற 3 பேர் உட்பட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முறைகேட்டில் முக்கிய நபர்களான இடைத்தரகர் ஜெயக்குமாரும், முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தலைமறைவாக உள்ள…

மேலும்...

சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது. சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை,…

மேலும்...

பாஜகவில் இணைந்த அதிமுக எம்பி!

சென்னை (02 பிப் 2020): அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, 2014ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரக பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஜெயலலிதா என்னை அடித்தார் என்று கூறி கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பரபரப்பை கிளப்பினார். இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அதேசமயம் வேறு சில கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய…

மேலும்...