
திமுக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை (22 ஜன 2020): ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது: வாழ்வா, சாவா…