தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர்,…

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...

டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (19 ஜன 2020): ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட “சுற்றுச்சூழல் அனுமதியும்” “மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்” தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட…

மேலும்...

5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி – அமைச்சர் விளக்கம்!

கோபிச்செட்டிபாளையம் (19 ஜன 2020): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு மையங்களில் நடைபெறும் என்று பரவும் தகவல் வதந்திதான் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று…

மேலும்...

நடிகர் ரஜினி விவகாரம் குறித்து எச்.ராஜா கருத்து!

சென்னை (19 ஜன 2020): நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில்…

மேலும்...

வேலூரில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் (19 ஜன 2020): வேலூர் கோட்டையில் வைத்து இளம் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வன்புணர்வு…

மேலும்...

பொறுத்தது போதும் – பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (19 ஜன 2020): சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். பாஜகவை கொஞ்சம் கூட எதிர்த்து பேசாமல் இருந்து வந்த அதிமுகவினர் தற்போது எதிர்க்க தொடங்கியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாஜகவின் நட்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக உள்ளுரில் வாழும் அனைத்து…

மேலும்...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு முகாம்!

சென்னை (19 ஜன 2020): போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

சென்னை (18 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தமது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரான பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 11, 12 பேர் கொண்ட பட்டியல் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொன் ராதாகிருஷ்ணன்,…

மேலும்...

வெளியில் சொல்லாதீர்கள் – ஸ்டாலின் கண்டிப்பு!

சென்னை (18 ஜன 2020): கூட்டணி கட்சிக்குள் உள்ள விவகாரங்களை பொதுவில் சொல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு கட்சியினரும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பின்பு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-…

மேலும்...