சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ காப்பி சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

சென்னை (18 ஜன 2020): சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ தயாரிப்பவர் பால் காய்ச்ச கழிவரைக்கு உபயோகிக்கும் நீரை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஊழியர் ரெயில் கழிவரைக்கு பயன்படுத்த செல்லும் நீரை பிடித்து அதில் பால் காய்ச்சுவது போன்று உள்ளது. இதற்கிடையே அந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ரஜினிக்கு முரசொலி இதழ் பொளேர் பதில்!

சென்னை (18 ஜன 2020): முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்றும் துகளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி பத்திரிகை பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ”முரசொலி” வைத்திருந்தால் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். ‘முரசொலி’ வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி…

மேலும்...

பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

சென்னை (18 ஜன 2020): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு,…

மேலும்...

எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை…

மேலும்...

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் நாம் தமிழரைவிட மோசமாக இருக்கும்: சீமான்!

அருப்புக்கோட்டை (18 ஜன 2020): காங்கிரஸ் திராவிட கட்சிகளை விட்டுப் பிரிந்து போட்டியிட்டால் நாம் தமிழரை விட மோசமான வாக்குகளை பெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர். ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை சீமான் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம்…

மேலும்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்!

மதுரை (18 ஜன 2020): அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் புதிய சாதனை படைத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றன. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர்…

மேலும்...

தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது!

சென்னை (18 ஜன 2020): தமிழகம் முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு…

மேலும்...

பெரியார் மீது அவதூறு பரப்பியதாக ரஜினி மீது போலீசில் புகார்!

சென்னை (18 ஜன 2020): நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, நாட்டுக்கு ‘சோ’ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை என்று பேசினார். அப்போது, “முரசொலி வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று அவர் பேசியதும், தந்தை பெரியார் பேரணி குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு மற்றும்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் குறித்து கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

சென்னை (17 ஜன 2020) திமுக காங்கிரஸ் இடையேயான விரிசல் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிரிவு ஏற்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன் என்றாா். அதை தொடர்ந்து வேறெந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

மேலும்...

பாஜக தலைவரிடம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் (17 ஜன 2020): நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சாமி சிலைகளைப் பதுக்கி வைத்தது தொடர்பாக பாஜக தலைவர் கைது செய்யப் பட்டுள்ளார். வேதாரண்யத்தை சேர்ந்த செல்வம். இவர் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய பாஜக செயலாளர். இவரது நண்பர் பைரவ சுந்தரம். இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் குறித்து சிலை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் சோதனை செய்தபோது,…

மேலும்...