மிரட்டிய ஸ்டாலின் – பணிந்த எடப்பாடி!

சென்னை (16 ஜன 2020): இவ்வருடம் பெரியார் விருது இதுவரை அறிவிக்காதது காரணம் ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் உடனே பெரியார் விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு. தந்தை பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) மாலை சமூக வலைதலங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது 2019, யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக்…

மேலும்...

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த…

மேலும்...

ரஜினிக்கு தைரியமில்லாமல் போனது ஏனோ- சுபவீ சரமாரி கேள்வி (Video)

சென்னை (15 ஜன 2020): துக்ளக் விழாவில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலம் பற்றி பேசிய ரஜினி அதில் நடந்த உண்மை சம்பவத்தை கூற தைரியமில்லாமல் போனது ஏனோ? என்று சுபவீர பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி,…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் – துரை முருகன் பரபரப்பு தகவல்!

வேலூர் (15 ஜன 2020): திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் காட்பாடியில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்,“தி.மு.க ஆட்சியில் கிராமந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்ததைப்போல் படம் எடுத்துக்கொள்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவதாக சொன்னார்கள். அதன்பிறகு, விவசாயிகள் ஏரி மண்ணை எடுத்துக்கொள்ளலாம்…

மேலும்...

ஜல்லிக்கட்டில் தடியடி- அவனியாபுரத்தில் பரபரப்பு!

மதுரை (15 ஜன 2020): மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி பிரயோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் , மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிடாோர் அடங்கிய குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். ஜல்லிக்கட்டு…

மேலும்...

லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் – டிக்டாக்கால் ஏற்பட்ட விபரீதம்!

திருப்பூர் (15 ஜன 2020): திருப்பூர் அருகே டிக்டாக் ஏற்படுத்திய நட்பு பிறகு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் டிக்டாக் குறித்தும் அதன் விபரீதம் குறித்தும் நாம் கேள்வியுறுவது அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணமே உள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேந்த 10 ஆம் வகுப்பு மாணவி டிக்டாகிலேயே அதிக நேரத்தை செலவிடுவார். அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிடுவார். டிக்டாக் மூலம் வேல்முருகன் என்ற வாலிபர் பழக்கமானார். நாளடைவில் அது காதலானது. இருவரும்…

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...

ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (15 ஜன 2020): ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார். முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித்…

மேலும்...

ஒரே நாளில் சென்னையை அதிர வைத்த இரண்டு சம்பவங்கள்!

சென்னை (15 ஜன 2020): ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் சென்னையை அதிர வைத்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28), பெயின்டர் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் வேலை செய்துவந்தார். நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் உறவினர்கள் யுவராஜைத் தேடினர். அப்போது கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை…

மேலும்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பொங்கிய ஜெயக்குமார்!

சென்னை (15 ஜன 2020): பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று…

மேலும்...