துக்ளக் வைத்திருந்தால் அறிவாளியா? – ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை (15 ஜன 2020): துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. பத்திரிகையாளர், சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் இதழ் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர். விழாவில், துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு இதழை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா…

மேலும்...

தமிழக மக்களே…! இரண்டு நாட்களுக்கு கவனமா இருங்க!

சென்னை (14 ஜன 2020): தமிழகத்தில் இரண்டு நாட்கள் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

பண மதிப்பிழப்பால் பாதிக்கப் பட்ட பாட்டிக்கு உதவிய திமுக எம்.எல்.ஏ!

வேலூர் (14 ஜன 2020): பண மதிப்பிழப்பால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை இன்றும் வைத்துக் கொண்டு திண்டாடிய பாட்டிக்கு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் உதவியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் நாடே திக்கு முக்காடியது. பலர் செய்வதறியாது தவித்தனர். வங்கிகளில் காத்து கிடந்த மக்கள் பல சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த…

மேலும்...

தமிழக காங்கிரஸுக்கு சோனியா காந்தி எச்சரிக்கை – பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி!

சென்னை (14 ஜன 2020): தமிழக காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் சோனியா காந்தி எரிச்சல் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர். இவ்விவகாரம் டெல்லியில் பெருமளவில் பிரதிபலித்தது. இதனாலேயே குடியுரிமை சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…

மேலும்...

திமுக காங்கிரஸ் இடையே விரிசல் – டெல்லியில் பிரதிபலிப்பு!

சென்னை (14 ஜன 2020): திமுக மீது குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அப்செட்டாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்தது. இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ்…

மேலும்...

திருச்சியில் பரபரப்பு – நகைக்கடை அதிபர் வீட்டில் நடந்த கொடூரம்!

பட்டுக்கோட்டை (14 ஜன 2020): திருச்சியில் நகைக்கடை அதிபர் தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை கே.ஆா். அம்சவள்ளியம்மாள் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவா்களில் நிகில் மூளை வளா்ச்சிக்…

மேலும்...

கின்னஸ் சாதனை விருது பெற்ற கோவை மருத்துவர்!

கோவை (14 ஜன 2020): கோவை மருத்துவர் அரவிந்த் சங்கருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. குழந்தையின்மை சிகிச்சையில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், “குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்!

புதுடெல்லி (13 ஜன 2020): தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னான பிறகு புதிய தலைவராக எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. சமீப காலமாக மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், குப்பு ராமு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் யாருக்கு மாநில தலைவர் பதவி…

மேலும்...

தமிழக அரசு மீது மீது எச்.ராஜா தாக்கு!

சென்னை (13 ஜன 2020): தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டதாகவும் அரசு அதனை சரிவர கண்டு கொள்ளவில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளி முஸ்லீமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிப்பாங்க என்றும்…

மேலும்...

பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்!

மதுரை (12 ஜன 2020): பொங்கல் பண்டிகைக்காக எட்டையபுரம் ஆட்டு சந்தையில் குட்டி ஆடு முதல் கறிக்கான ஆடுகள் வரை சுமார் ரூ.ஐந்து கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆட்டு சந்தை. பிரதி சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் அதிகாலை ஐந்து மணிக்கே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் கூடி சந்தை…

மேலும்...