ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,” சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள். உள்ளாட்சித்…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...

பெண்கள் ஆடை அவிழ்ப்பதை வீடியோவாக எடுத்த ஊழியர் – விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

கோவை (07 ஜன 2020): பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே உள்ளது. இங்கு பணியாற்றும், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவது, செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இந்நிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி, பெண்…

மேலும்...

உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பேசிய திமுக MLA ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், சட்டம்…

மேலும்...

ஐயப்ப பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமுமுகவினர்!

தென்காசி (07 ஜன 2020): ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த பக்தர்களுக்கு தமுமுகவினர் அடைக்கலம் கொடுத்து அலுவலகத்தில் தங்க வைத்தர்னர். தென்காசி மாவட்டம் பண்பொழியில் நேற்று இரவு (6-1-2020) விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர்கள் சபரிமலை செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தங்குவதற்கு அருகில் இடமின்றி தவித்தனர். இந்நிலையில் ஜயப்ப பக்தர்கள் தங்குவதற்காக பண்பொழி தமுமுக அலுவலகத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

மேலும்...

சரவணா ஸ்டோர்ஸில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை (07 ஜன 2020): சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்குலேட்டரில் சிறுவன் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகைக்கு தாயுடன் துணி எடுக்கச் சென்ற போது சிறுவன் ரனில்பாபு எஸ்கலேட்டரில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்...

ஆபாச வீடியோவை காட்டி சிறுமியிடம் சில்மிஷம் – கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

சென்னை (07 ஜன 2020): ஆபாச வீடியோவைக் காட்டி 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 68 வயது அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி… 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின்…

மேலும்...

சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

மேலும்...

மதம் சார்ந்து பார்க்காமல் தமிழக மக்கள் நலன் பாதுகாப்பு – கவர்னர் உரை!

சென்னை (06 ஜன 2020): தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார். அந்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில்…

மேலும்...

அதிமுக பாமக இடையே புகைச்சல்!

சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக…

மேலும்...